பக்கம்:பௌத்த தருமம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

157



தருக்க ரீதியில் 'வஜ்ரசூசி' எடுத்து விளக்குகின்றது.

பௌத்தர்கள் சாதிப் பிரிவினையை அதிகமாய் தாக்கி வந்ததால், பிராமணர்கள் புதிய புதிய சாத்திரங்கள், புராணங்களின் மூலம் அதைப் பலப்படுத்த வேண்டியதாயிற்று.

சூத்திரர்களுக்குத் தரும உபதேசம் செய்யக் கூடாது என்ற மனு முதலிய ஸ்மிருதிகளின் கூற்றுக்கு மாருகப் பௌத்த தருமத்தின் கதவுகள் யாவருக்கும் வேற்றுமையின்றித் திறந்து வைக்கப் பெற்றிருந்தன. புத்தரும் மற்றைப் பிக்குகளும், சண்டாளர் உட்பட எல்லோருக்கும் உபதேரா செய்யத் தயங்கவில்லை.

வேதியர் ஒழுக்கம்

புத்தர் காலத்திருந்த பிரமாணர்கள், பெரும்பாலும் சொத்துக்கள் சேர்ப்பதும், வேதமந்திரங்களை ஓதுவதும், தேவதைகளைப் பிரார்த்தனை செய்வதும் தவிர, ஒழுக்கத்தைப் பேணாமலும், மெய்ஞ்ஞானம் பெறக்கூடிய மார்க்கத்தைக் கண்டு அதிலே உறுதியுடன் பயிற்சிபெற்று முன்னேறாமலும் இருந்து வந்தனர் என்று தெரிகின்றது. அவர்கள் நிலையைப் பற்றியும், அவர்களைப்பற்றிப் புத்தர் கொண்டிருந்த கருத்தைப்பற்றியும் 'தேவிஜ்ஐ சுத்தம்' (திரைவித்ய சூத்திரம்) என்ற சூத்திரத்தில் தெளிவாய்க் காண முடிகின்றது. புத்தர் பெருமான் வசிட்டன் என்று அந்தண வாலிபனுக்குச் செய்த உபதேசம் இந்த சூத்திரத்திலே விரிவாகக் குறிக்கப் பெற்றுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/164&oldid=1386827" இலிருந்து மீள்விக்கப்பட்டது