பக்கம்:பௌத்த தருமம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

159



வசிட்டன் - இல்லை!

புத்தர் - சரி, வசிட்டா! பிராமணர்கள் ஓதும் மூன்று வேதங்களையும் இயற்றியவர்கள் முற்காலத்து ரிஷிகள்; அவர்களுடைய மந்திரங்களையே பிராமணர்கள் அவர்கள் உச்சரித்த அதே முறையிலே, அதே குரலிலே, அத்தியயனம் செய்து வருகிறார்கள்; அத்தகைய ரிஷிகளாவது, 'நாங்கள் அதை அறிவோம், நாங்கள் அதைக் கண்டுள்ளோம், பிருமம் எங்கே யிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்!' என்று சொல்லியிருக்கிறார்களா?

வசிட்டன் - அவ்வாறில்லை.

புத்தர் - ஆகவே, மூன்று வேதங்களையும் கற்று உணர்ந்த பிராமணர்கள் சொல்வது இதுதான்: 'எங்களுக்குத் தெரியாத, நாங்கள் பார்த்திராத ஒன்றை அடைவதற்கு நாங்கள் வழிகாட்ட முடியும்; "இதுதான் நேர்பாதை, இதன்படி செல்பவன் பிருமத்தோடு ஐக்கியமாவதற்கு இதுவே நேரான மார்க்கம்" என்று நாங்கள் கூற முடியும்.'

வசிட்டா - நீ என்ன நினைக்கிறாய்? இது இவ்வாறு இருப்பதால், மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாயினும், அந்தப் பிராமணர்களுடைய பேச்சு அறிவீனமான பேச்சுத்தான் என்று ஏற்படுகிறதல்லவா?

வசிட்டன் - அது (அவர்கள் பேச்சு) அவ்வாறு இருப்பதால், மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த பிராமணர்களின் கூற்று அறிவீனமானதுதான் என்று ஏற்படுகின்றது.

புத்தர் - தாங்களே அறியாத, பார்த்திராத, பிருமத்தோடு ஐக்கியமாவதற்குப் பிராமணர்கள் வழி காட்டுதல் என்பது உலக இயல்புப்படி நடவாத காரியம்!

வசிட்டா ! குருடர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்கையில், முதலில் இருப்பவரும் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/166&oldid=1386833" இலிருந்து மீள்விக்கப்பட்டது