பக்கம்:பௌத்த தருமம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

பெளத்த தருமம்


இருப்பவர்கள், அதை அடைந்து அதனுடன் ஐக்கிய மாவதற்கு வழிகாட்ட முன்வருவதும் அறிவீனமானதேயாம்.

வசிட்டன் — ஆம்.

புத்தர் — அப்படி உலகில் சாத்தியமில்லை.

நான்கு சாலைகள் சந்திக்கும் ஓரிடத்தில் ஒருவன் மாடிக்குப் படிக்கட்டுக் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படிக்கட்டு ஒரு மாளிகைக்கு மேலே ஏறிச் செல்வதற்காக. (மாளிகையை அமைக்காமல் படிக்கட்டு மட்டும் கட்டும்) அவனை ஜனங்கள் பார்த்து, ‘எந்த மாளிகையின் மீது ஏறுவதற்கு இந்தப் படிக்கட்டுக் கட்டுகின்றாயோ, அந்த மாளிகை கிழக்கே யிருக்கின்றதா, தெற்கே யிருக்கின்றதா, அல்லது மேற்போயிருக்கின்றதா, அல்லது வடக்கே யிருக்கின்றதா என்றும், அது உயரமானதா, தாழ்ந்ததா, நடுத்தரமானதா என்றும் கேள்விகள் கேட்பார்கள்.

அவன் ‘இல்லை’ என்றே பதில் சொல்வான்.

அப்போது ஜனங்கள், ‘நண்பா! எதன் மீதோ ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டுக் கட்டுகிறாய்; - அடியில் மாளிகை இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் நீ அந்த மாளிகையை அறியவுமில்லை, பார்க்கவுமில்லை!’ என்று சொல்வார்கள்.

அவன் ‘ஆம்’ என்பான்.

இந்த நிலையில் அந்த மனிதனின் (பேச்சு - அறீவீனமான பேச்சுத்தானே, வசிட்ட?

வசிட்டன் — உண்மையில் அப்படித்தான்!

புத்தர் — பிராமணர்கள் பிருமத்துடன் ஐக்கிய மாவதற்கு வழி காட்டுவதும் இத்தகைய அறிவீனமான பேச்சுத்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/169&oldid=1386798" இலிருந்து மீள்விக்கப்பட்டது