பக்கம்:பௌத்த தருமம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 போத்தியாங்கங்கள் - போதி அடைவதற்குரிய ஸ்தி, தரும விசாரம், வீரியம், ஆனந்தம், மனனம், சமாதி, உபேட்சை ஆகிய எழு. பெளதிகவாதி - பெளதிகப் பொருள்களைத் தவிர உலகில் நிலையான வேறு எதுவுமில்லை என்ற கொள்கையுடையவர். பெளத்த உபாசகர் - பெளத்த தருமத்தைச் சேர்ந்த இல்வாழ்வோர். பெளத்த தருமம் - புத்தர் போதித்த அருளறம். பெளத்தம் - பெளத்த தருமம். பெளத்தர் - பெளத்த சமயத்தைச் சேர்ந்தோர். மகாயானம்- பெரிய அல்லது உயர்ந்த வாகனம்,பெளத்த சமயப் பிரிவுகளில் முக்கியமான ஒன்று. மகா ஸ்தவிரர் - மகா தேரர், 20-ஆண்டுகளுக்கு மேல் பிக்குவா யிருந்தவர். மக்கம் - மார்க்கம், வழி. மனனம் - தெளிவோடு அமைதியாயிருத்தல், மஜ்ஜிம - மத்திய, நடுத்தர. மாரன் - நல்லொழுக்கத்தின் விரோதி, சயித்தானைப் போன்றவன். மீமாம்சை - உண்மையை நாடும் ஆராய்ச்சி. முப்பத்தேழு தத்துவங்கள் - ஸ்திப் பிரஸ்தானங்கள் 4, ஸம்யக் பிரதானங்கள் 4, இருத்தி பாதங்கள் 4, இந்திரியங்கள் 5. பலங்கள் 5, போத்தியாங்கங்கள் 7, அஷ்டாங்க மார்க்கம் 8, ஆக 37 நியமங்கள். வக்கம் - வர்க்கம். வத்து - வஸ்து. வாயில் - ஆறு பொறிகள், விகாரை - பிக்குகள், பிக்குணிகள் தங்கும் பெளத்தப் பள்ளி, மடாலயம், கோயில். விசுத்தி மார்க்கம் - பரிசுத்தமான வழி : புத்த கோஷர் எழுதிய நூல். விஞ்ஞானம் - (விக்ஞானம்) - பிரக்ஞை, மறுபிறப்புக் குரிய தாது, ஐந்து கந்தங்களில் ஒன்று, 12 நிதானங் அளில் ஒன்று. - வியங்கம் - தொகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/17&oldid=848967" இலிருந்து மீள்விக்கப்பட்டது