பக்கம்:பௌத்த தருமம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

163


வசிட்டன் — ஆம்!

புத்தர் — உலகில் அப்படி சாத்தியமில்லை.

முயற்சியின் அவசியம்

மேலும், இங்த அசிரவதி நதியில் கரைபுரண்டு வெள்ளம் வருகிறது; இங்கிருந்து வேலை காரணமாக அக்கரைக்குச் செல்லவேண்டிய ஒருவன், இங்கேயே நின்று கொண்டு அக்கரையைப் பார்த்து, "அக்கரையே, இங்கே வா! இந்தப் பக்கத்திற்கு வா!' என்று கூவிப் பிரார்த்தனை செய்தால், அது வந்து விடுமா? அங்க மனிதனுடைய பிரார்த்தனை, நம்பிக்கை, புகழ்ச்சிக்காக அந்தக் கரை இங்கே வந்து விடுமா ?

வசிட்ட ! அதேபோல, மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த பிராமணர்கள், தம்மை உண்மையான பிராமண ராக்கக் கூடிய குணங்களைப் பயிலுவதை விட்டு விட்டு, எங்தக் குணங்கள் மனிதர்களைப் பிராமணராகச் செய்ய முடியாதோ அவைகளைப் பயிற்சி செய்து கொண்டு, அவர்கள் இந்திரனையும், வருணனையும், ஈசானாவையும், பிரஜாபதியையும், பிருமாவையும், மகித்தியையும், யமனையும் பிரார்த்தனை செய்து அழைக்கிறார்கள். அவசியமான ஒழுக்கங்கள் இல்லாமல், இத்தகைய பிரார்த்தனைகளால், மரணத்திற்குப் பின், உடல் கரைந்த பிறகு, பிருமத்தோடு ஐக்கியமாகிவிடலாம் என்று நம்புவதை என் சொல்வது? இது உலகில் சாத்தியமில்லை!

ஒரு மனிதன் அ சி ர வ தி யி ன் இக்கரையிலிருக்கும் போது, அவனுடைய கைகளை முதுகுப்புறமாக ஒரு சங்கிலியால் பிணைத்துவிட்டால், அவன் மறு கரையை அடைய முடியுமா?

வசிட்டன் — நிச்சயமாக முடியாது, கெளதமரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/170&oldid=1386793" இலிருந்து மீள்விக்கப்பட்டது