பக்கம்:பௌத்த தருமம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

167


புத்தர் - ஆம், மனஸாகதம் என்ற இந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு இதற்கு வரும் பாதைகள் யாவும் தெரிந்திருக்கும் அல்லவா?

வசிட்டன் - ஆம்.

புத்தர் - அது போல்தான் ததாகதரும். அவர் பிருமலோகத்திலெயே பிறந்திருக்கிறார், வசித்திருக்கிறார். அதற்குச் செல்லும் மார்க்கமும் அவருக்குத் தெரியும்.

வசிட்டன் - அப்படித்தா ன் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுக்குப் பிருமத்தோடு ஐக்கியமாகும் மார்க்கத்தைக் காட்டுங்கள் ! பிராமண சாதியைத் தாங்களே காப்பாற்ற வேண்டும்!

புத்தர் - வசிட்ட, நான் பேசுவதைச் செவிமடுத்துக் கவனமாகக் கேட்பாயாக !

பூரண ஞானம் பெற்ற ஒரு ததாகதர் (புத்தர்) வெவ்வேறு காலங்களில் இவ்வுலகில் தோன்றுவதுண்டு. அவர் தாமாகவே இந்த உலகையும் , பாதலத்திலுள்ள தேவதைகள் உலகத்தையும், உயரேயுள்ள மாரலோகம், பிருமலோகம் முதலியவைகளையும் பார்க்கிறார். சத்தியத்தை அவர் (கண்டு) போதிக்கிறார்: சொல்லிலும் பொருளிலும் அதை வெளிப்படுத்துகிறார், அதன் தொடக்கமும் இனியது, நடுவும் இனியது, முடிவும் இனியது. பரிசுத்தத்தோடும், பூரணமான செம்மையுற்ற நிலையோடும், உயரிய வாழ்க்கையை அவர் தெரிவிக்கிறார்.

இல்வாழ்வான் (அதைக் கேட்டுத்) தன்னுடைய துயரம் நிறைந்த நிலையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறான், குடும்பப் பாசங்களையும், தடைகளையும் பற்றிக் கருத்துக் கொள்கிறான். பிறகு தலையை முண்டனம் செய்து கொண்டு, தாடியை எடுத்துவிட்டுக் காவியுடை அணிந்து, புத்தரைப் பின்தொடர்ந்து வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்கிறான். அவன் ஏகாங்கியாகிறான், தன்னடக்கத்தை மேற்கொள்கிறான், பாதிமொக்கம் (பிராதி மோட்சம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/174&oldid=1386849" இலிருந்து மீள்விக்கப்பட்டது