பக்கம்:பௌத்த தருமம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பெளத்த தருமம்


கூறுகிறான்; நல்ல ஒழுக்க நெறியையே பேசுகிறான்; சரியான சமயத்திலேயே எதையும் கூறுகிறான்; மேலும், நன்மை விளைப்பதாயும், ஆதாரமுள்ளதாயும், விளக்க முற்றதாயும், அறிவு நிறைந்ததாயுமே அவன் பேச்சு விளங்குகின்றது.

இதுவும் அவனுடைய மேன்மைக் குணமாகும்.

அவன் எங்தத் தாவரத்திற்கும், பிராணிக்கும் தீங்கு செய்வதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவே புசிக்கிறான்; நடனம், பாட்டு, இசை, இன்பக் காட்சிகள் ஆகியவற்றை அவன் விலக்கிவிடுகிறான்; மலர், மாலைகள், வாசனைகள், தைலங்கள் முதலியவற்றால் . அவன் தன்னை அலங்கரித்துக் கொள்வதையும், அவைகளை உபயோகிப்பதையும் விலக்கிவிடுகிறான்; உயர்ந்த கட்டில்கள், பெரிய மெத்தைகள் முதலியவற்றையும் அவன் ஒதுக்கிவிடுகிறான்.

இதுவும் அவனுடைய மேன்மைக் குணமாகும்.

அவன் வெள்ளியையோ, தங்கத்தையோ பாரிடத்தும் பெறுவதில்லை; சமைக்காத தானியத்தையும், பச்சைப் புலாலையும் பெறுவதில்லை; எந்த ஸ்திரியையோ, பெண்ணையோ ஏற்றுக் கொள்வதில்லை; ஆடவராயினும் பெண்டிராயினும் அடிமைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை; செம்மறியாடுகள், வெள்ளாடுகள், கோழிகள், பன்றிகள், யானைகள், கால்நடைகள், குதிரைகள், வயல்கள் அல்லது நிலங்கள் முதலியவைகளையும் அவன் பெறுவதில்லை.

இதுவும் அவனது மேன்மைக் குணமாகும்.

அவன் எதையும் வாங்கி விற்பதில்லை. கள்ளப் படிகளை உபயோகித்து, உலோகங்களைக் கலப்படமாக்கியும், கள்ள அளவைகளைப் பயன்படுத்தியும் அவன் எவரையும் ஏமாற்றுவதில்லை.

இதுவும் அவனது மேன்மைக் குணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/177&oldid=1386893" இலிருந்து மீள்விக்கப்பட்டது