பக்கம்:பௌத்த தருமம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்த சங்கம்

175



மட்டும் பல நாடுகளிலும் மாறாமல் நிலைத்து நிற்கின்றது.

சங்கத்திலே சேர்ந்த பிக்குகள் அனைவருமே மகாஞானிகள் என்றோ, எல்லோரும் நிருவாணத்திற்கு உரியவர்கள் என்றோ, எல்லோருமே முதல் தரமான ஒழுக்க நிலையில் நின்றனர் என்றோ கருத வேண்டியதில்லை. ஆனால் சங்கமே அவர்கள் அனைவருக்கும் பயிற்சிக் கூடமாக விளங்கியது. துறவிகள் தனித்தனியாக, வழிகாட்டுவோரின்றித் தவிக்காமல், சங்கம் அவர்களுக்குத் தாரகமாக உதவி வந்தது. பௌத்த தருமமே வாழ்க்கைப் பயிற்சி, மெய்வழிப் பயிற்சி என்பது முன்னால் கூறப்பட்டுள்ளது. அத்தகைய பயிற்சியில் கண்ணுங் கருத்துமா யிருந்து, வளர்ச்சி பெறுவதற்குச் சங்கமே துணையாகவும், தக்க சூழ்நிலையாகவும் அமைந்திருந்தது. தற்பயிற்சி-தன்னைத் தானே திருத்திக் கொள்ளல் - என்ற முறைக்குப் போதி மாதவரான புத்தர் பெருமான் காட்டிச்சென்ற அறவழியைப் பற்றிய உபதேசங்கள் முதலில் தெரிய வேண்டும். காகிதமும், அச்சு வாகனமும் இல்லாத பண்டைப் பழங்காலத்திலே இவ்வுபதேசப் பொக்கிஷங்களைச் சங்கமே பாதுகாத்து வந்தது; அவைகளுக்குத் தெளிவான உரைகளைத் தயாரித்து வைத்தது. அது மட்டுமன்று. ஆதியில் சுமார் 500 ஆண்டுகள் வரை புத்தருடைய உபதேசங்கள் எழுதாக் கிளவியாகவே பரவி வந்தன. அந்நிலையிலும் அவைகளைத் தொகுத்துத் தக்கமுறையில் பாதுகாத்துவந்த பிக்குகளின் பரம்பரை சங்கமாகும்.

வெறும் போதனைகள் மக்களை வெகுதூரம் கொண்டுசெல்ல முடியாது. இடையிடையே எழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/182&oldid=1386876" இலிருந்து மீள்விக்கப்பட்டது