பக்கம்:பௌத்த தருமம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சங்கம் 181 வேண்டும். சங்கத்தில் ஒருமுறை சேர்ந்தபிறகு அவர்கள் எப்போது வேண்டுமாயினும் அதைவிட்டு வெளியேறலாம். வித்தியார்த்திகளும் மற்றப் பிக்கு களைப் போலவே மஞ்சள் நிறமான சிவர ஆடை புனைந்து கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் நண் பகலுக்கு முன் ணுல் பிக்குகளோடு ஒரே வேளை உணவருந்துவார்கள். அவர்கள் மடாலயங்களில் பிக்குகளுக்குத் தொண்டு செய்வதும், தண்ணிர் கொண்டுவருதல், தரையைச் சத்தம் செய்தல் முதலிய ஊழியங்களேச் செய்வதும், வெளியே தெருக் களுக்குச் சென்று 00ாவுப் பிட்சை யெடுத்து வருவதும் வழக்கம். வேலை நேரம் போக எஞ்சிய நேரங்களில், பாலிமொழி கற்றல், திரிபிடகங்கள் கற்றல், பெரியோர்களிடம் உபதேசம் கேட்டல் முதலிய நற்காரியங்களே மேற்கொள்வார்கள். காலை யிலும் மய ஃலயிலும் அவர்கள் பிக்குகளோடு கலந் திருந்து திருமுறைகள் ஒதுவார்கள். இருபது வயது நிறைந்த பிறகு, அவர்கள் முழுத் துறவிகளாகிப் பிக்குகள் என்று அழைக்கப்பெறுவார்கள். பிக்குக ளாகச் சங்கத்திலே சேருவோர் உடனேயே அங்கீகரிக்கப் பெற்ற துறவிகளாகிருர்கள். சில குறிப் பிட்ட நோயுள்ள வர்கள், கடன்பட்டிருப்பவர்கள், அரச சேவையிலிருப்பவர்கள் ஆகிய சிலருக்கு மட்டும் சங்கத்தி, சேய அநுமதியில்லை. சங்கத்தில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் துறவியா யிருந்த பிக்குவைத் தேரர் (ஸ்தவிரர்) என்று அமுைப்பார்கள். அத்தகைய தேரரே புதிதாய்ச் சங்கத்திற்கு வருகிறவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/188&oldid=849006" இலிருந்து மீள்விக்கப்பட்டது