பக்கம்:பௌத்த தருமம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்த சங்கம்

188


வேண்டும். சில சமயங்களில் பெளத்த தருமத்தைச் சேர்ந்த உபாசகர்கள் விரும்பி அழைத்தால், அவர்களுடைய இல்லங்களிலும் போய் உணவருந்தலாம்.

பிக்குகள் நாள் முழுவதையும் நற்காரியங்களிலேயே கழித்து வருவார்கள். வித்தியார்த்திகளுக்குக் கல்வி போதித்தல், சாத்திர ஆராய்ச்சி, திருமுறைகளைப் பார்த்துப் பிரதிகள் எழுதுதல், பாலி மொழி பயிலுதல் முதலியவை அவர்களுக்குரிய தொழில்கள். பல பிக்குகள் தியானம் செய்து பழகுவதும் உண்டு. பிக்குகள் பெளத்த மடங்களான விகாரைகளிலோ, சோலைகளிலோ, வனங்களிலோ தங்கியிருந்து இவ்வாறு சாந்தியுடன் பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு பிராந்தியத்தில் வசிக்கும் பிக்குகள் அனைவரும் மாதத்தில் இருமுறை ஒரே யிடத்தில் கூடு வார்கள். அமாவாசியை, பெளர்ணமி ஆகிய தினங்கள் இதற்குக் குறிப்பிடப்பெற்றுள்ளன. இப்படிக் கூடுவதற்கு உபவஸ்தம்[1] என்று பெயர். உபவஸ்த நாளில் பிக்குகள் கூடிப் பக்தி சிரத்தையோடு திருமுறைகளைப் பாராயணம் செய்வார்கள். இரவில் விளக்கைச் சுற்றி யாவரும் அமர்ந்திருப்பார்கள். அப்போது பிராதிமோட்ச நூலில் குறித்துள்ள விநய விதிகள் வாசிக்கப்பெறும். பிக்குகளில் முதன்மையான தேரர் எழுந்திருந்து சங்க விதிகளின்படி முக்கியமான குற்றங்களாகக் கருதக் கூடிய


  1. உபவஸதம் – பட்டினி, உபவாசம்; இங்கே விரத நாள் என்று கொள்ளலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/190&oldid=1386811" இலிருந்து மீள்விக்கப்பட்டது