பக்கம்:பௌத்த தருமம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்த சங்கம்

185


பர்மாவில் பிக்குவைப் ‘பெரும்புகழ்’ என்று பொருள்படும் ‘புங்கி’ என்ற பெயராலேயே மக்கள் குறிப்பிடுவர். பிக்குவை எங்கே கண்டாலும், ஆண்களும் பெண்களும் அவரை வணங்கி மிக்க மரியாதையுடன் நடந்து கொள்வர். பிக்குகள் நடந்து செல்வதற்கு நடை பாவாடை விரிப்பதற்குப் பதிலாகப் பக்தியுள்ள பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை அவிழ்த்துத் தரையில் விரித்து, அதன் மீது அவர்களுடைய திரு வடிகள் பதியும்படி செய்வார்கள் என்றால், அந் நாட்டில் பௌத்தத் துறவிகளுக்குரிய பெருமை நன்கு விளங்கும். ஆனால் பிக்குகள், சீல விரதங்களில் நழுவி, ஒழுக்கம் குன்றி நடக்க ஆரம்பித்தால், பொதுமக்களும் அவர்களை மதிக்க மறுத்து விடுவார்கள்.

பிக்குகளின் சங்கத்தைப் போலவே, பிக்குணிகளின் சங்கத்திற்கு உரிய விதிகளையும் புத்தர் பெருமான் நியமித்திருந்தார். அவைகளில் முக்கிய மானவை எட்டு.[1] பிற்காலத்தில் பிக்குணிகளுக்குச் சங்கம் இல்லாமலே போய்விட்டது.

சங்கத்திலே சேர்ந்து வாழும் பிக்குகளிலே நிருவாண வழியில் நன்கு பயிற்சி பெற்று, உடம்பு


  1. பிக்குவை வணங்குதல், வசிக்கும் இடம், பிக்குகளிடம் உபதேசம் போட்டல், வருஷா கால முடிவில் சங்கத்தின் விசாரணைக்கு உட்பட்டிருத்தல், பெருந் தவறுகளுக்குப் பரியாரம், பயிற்சியின் முடிவு, பிக்குவிடம் பேசாமை, பிய்குவிடம் காட்டும் மரியாதை ஆகியவை பற்றிய விதிகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/192&oldid=1386816" இலிருந்து மீள்விக்கப்பட்டது