பக்கம்:பௌத்த தருமம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

189


உபதேசங்களைக் கூறிவந்தார். முதலாவதாக அவர் ‘தரும சக்கரப் பிரவர்த்தன சூத்திர’த்தை ஓதுகையில் அஜ்ஞாத கௌண்டின்யர், தாம் சார நாத்தில் மான் தோட்டத்திலே பெருமானுடைய திருவாயிலிருந்து கேட்ட முறையிலேயே அச் சூத்திரம் அமைந்திருந்ததாகவும், அதை முதலில் கேட்டதனால் தமக்கு மேற்கொண்டு பிறப்பை ஒழிக்கும் ஞானம் ஏற்பட்டதாகவும் கூறினார். அப்போது பெருமானின் நினைவு வந்ததால், அவர் சிறிது நேரம் மெய்ம்மறந்து விழுந்துவிட்டார். மேற்கொண்டு ஆனந்தர் கூறி வந்த சூத்திரங்களை மகாகாசியபரும், கூடியிருந்த பிக்குகள் அனைவரும் சரிதான் என்று ஏற்றுக் கொண்ட பிறகு, மற்றச் சூத்திரங்களும் வரிசையாகக் கூறப்பெற்றன. ஆனந்தர் கூறியவைகளைத் தொகுத்து, அவதானங்கள் பற்றியவை, கந்தங்கள் பற்றியவை, இருத்தி ஆற்றல்கள் பற்றியவை, புத்தரின் விளக்கங்கள் என்றவாறு சூத்திரங்கள் பிரிக்கப் பெற்றன. சில தொகுதிகள் நீளத்தை வைத்துத் தீக (நீண்டது) என்றும், மஜ்ஜிம (மத்திமம் அல்லது நடுத்தரமானது) என்றும், சுள்ள (குள்ளமானது) என்றும் பிரிக்கப்பெற்றன. பாடல்களாக உள்ளவை வேறுபடுத்தப் பெற்றன. ஆனந்தர் கூறியவை தருமம் சம்பந்தமான சூத்திரங்களே, அவைகள் ‘சுத்த பிடகம் (சூத்திர பிடகம்)’ என்ற தலைப்பில் பல பகுதிகளுள்ள ஒரே தொகுப்பாக்கப் பெற்றன. சுத்தம் (பாலி) என்பது சூத்திரம்; பஞ்சினால் நூற்கும் நூலைச் சூத்திரம் என்பது போல், கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/196&oldid=1386830" இலிருந்து மீள்விக்கப்பட்டது