பக்கம்:பௌத்த தருமம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பெளத்த தருமம்


வாசகங்களுக்கும் சூத்திரங்கள் என்று பெயருண்டாயிற்று. பின்னால் பல சூத்திரங்களைக் கொண்ட நூலுக்கும் சூத்திரம் என்று பெயருண்டாயிற்று. ஆனந்தரைப் போல உபாலி விநய ஒழுக்கங்கள் பற்றிய சூத்திரங்களை ஓதினார். அவை அனைத்தும் சரியாயிருந்ததால், சபையோர் கேட்டு ஏற்றுக் கொண்டனர். அவை ‘விநய பிடகம்’ என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றன.

கடைசியில் அபிதரும (தருமம் பற்றிய சூத்திரங்களுக்கு விளக்கம்) சூத்திரங்களைத் தலைவர் மகா காசியரே ஓதினார். அவைகளும் அங்கீகரிக்கப் பெற்று ‘அபிதரும பிடகம்’ என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றன.

இவ்வாறு பௌத்த பிக்குகளின் முதல் மகா நாட்டிலே திரிபிடகங்கள் தொகுதிகளாகத் தொகுக்கப்பெற்றன. அப்போது முதலில் தருமம், விநயம் ஆகிய இரண்டு பிடகங்களே தொகுக்கப் பெற்ற தாயும், பின்னால் அந்த இரண்டுமே மூன்றாகப் பிரிக்கப்பெற்றன என்றும் சொல்லப்படுகின்றது. சூத்திரங்களைத் தொகுக்கும் பணியிலே முதன்மையாயிருந்தவர்கள் அனைவரும் புத்தர் பெருமானுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தவர்கள்.

இரண்டாம் மகாநாடு

முதல் மகா நாட்டிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிக்குகளின் சங்கத்திலே புதிதாகத் தோன்றிய சில பழக்கங்களை நீக்க வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. பெரும்பாலான பிக்குகள் பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/197&oldid=1386832" இலிருந்து மீள்விக்கப்பட்டது