பக்கம்:பௌத்த தருமம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

191


விதிகளின் புனிதத்திற்குப் பாதகமானவைகளைப் களைந்துவிட வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆனால் வேறு பல பிக்குகள் அதை எதிர்த்தனர். அந்நிலையில் வைசாலி நகரில் 700 பிக்குகளைக் கொண்ட மகா நாடு கூடி, எட்டு மாதங்கள் ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நிகழ்ந்த பின், புதியன புகுவதைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பெற்றது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத பதினாயிரம் பிக்குகள் பழைய சங்கத்திலிருந்து தனியாகப் பிரிந்து சென்றுவிட்டனர்.

மூன்றாம் மகா நாடு

இதற்குப் பின்னால் சுமார் 125 ஆண்டுகள் கழிந்த பிறகு, அசோக சக்கரவர்த்தி காலத்தில், அவருடைய மகத சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாடலிபுரத்தில் பிக்குகளின் மூன்றாம் மகா நாடு நடத்தப்பெற்றது. அதிலும் குறைபாடுகள், கலப்புக்கள் யாவும் நீக்கப்பெற்றுத் திரிபிடகங்கள் பரிசுத்த நிலையில் வைக்கப்பெற்றன. அந்த மகா நாட்டைச் சக்கரவர்த்தியே கூட இருந்து சிறப்பாக நடத்தி வைத்தார்.

நான்காம் மகா நாடு

இதற்கு இரண்டு நூற்றாண்டுகட்குப் பிறகு கனிஷ்க சக்கரவர்த்தி காலத்தில் நான்காவது முறையாக ஒரு மகா நாடும் நடத்தப் பெற்றது.

கிறிஸ்து நாதர் பிறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்னால் இலங்கைத் தீவை ஆண்டுவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/198&oldid=1386835" இலிருந்து மீள்விக்கப்பட்டது