பக்கம்:பௌத்த தருமம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பெளத்த தருமம்


வட்டகாமினி அபயன் காலத்திலேதான் திரிபிடகங்கள் எழுத்தில் எழுதி வைக்கப்பட்டதாக இலங்கை வரலாறுகள் கூறுகின்றன.

பௌத்த சமயப் பிரிவுகள் மகத நாட்டில் புத்தர் காலத்தில் வழங்கிவந்த அர்த்தமாகதி என்ற பாலிமொழியிலேயே அவர் பேசியும் உபதேசித்தும் வந்தார். அதற்கு முன்னால் சமய சம்பந்தமான விஷயங்கள் யாவும் வடமொழியாகிய சமஸ்கிருதத்திலேயே கூறப்பெற்று வந்தன. ஆனால் புத்தர், மக்கள் பேசும் மொழியிலேயே, எல்லோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்து வந்தார். எனவே திரிபிடகங்கள் பாலிமொழியிலேயே அமைந்துள்ளன.

திரிபிடகங்களையே ஆதாரமாய்க் கொண்டு அவைகளை ஓதி, அவைகளின்படி நடந்துவரும் பௌத்தர்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலிய நாடுகளிலே வசித்து வருகிறார்கள். அவர்கள் பின்பற்றும் பௌத்த தருமத்திற்குத் தேரவாத பௌத்தம் (தேரர்களுடைய பௌத்தம்) என்று பெயர்.

பிற்காலத்தில் வட இந்தியாவில் பௌத்த தருமத்தைப் பற்றியும், புத்தர் சரித்திரம் பற்றியும் வடமொழியிலே பல நூல்கள் தோன்றின. பௌத்தர்களிலே ஒரு பிரிவினர் தேரவாத பௌத்தம் பூரணமான தன்று என்று கருதிப் புதிய கருத்துக்களையும், தத்துவங்களையும் ஆராய்ந்து தமது தருமத்தோடு சேர்த்துக் கொண்டனர். இவர்களுடைய பௌத்த தருமத்திற்கு மகாயான பௌத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/199&oldid=1386836" இலிருந்து மீள்விக்கப்பட்டது