பக்கம்:பௌத்த தருமம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

199


திருமுறைகள்

மேலே கூறிய பௌத்த சமயப் பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஆதாரமான நூல்கள் பல இருக்கின்றன. மகாயானம், தேரவாதம் ஆகிய முக்கியமான இரண்டு பிரிவுகளுக்கும் முறையே வடமொழியிலும், பாலிமொழியிலும ஆதார நூல்கள் உள்ளன. இவைகளில் பாலியிலுள்ள திரிபிடகங்களே சரித்திர பூர்வமாக முதலில் ஏற்பட்டவை. அவைகளே திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன.

பிடகங்கள் சுத்த பிடகம், விநய பிடகம், அபிதரும பிடகம் என்று மூன்று தொகுதிகளாயுள்ளன. சுத்த பிடகம் புத்தர் பிரானின் உபதேசங்களைச் சூத்திரங் களாகக் கொண்டது; விநய பிடகம் சங்கத்திற்குரிய ஒழுக்க நியமங்களைக் கொண்டது; அபிதரும பிடகம் சூத்திரங்களுக்குரிய விளக்கங்களையும், மற்றும் நுணுக்கமான தத்துவங்களையும் கொண்டது. முதற் பிடகத்திலுள்ள எல்லாச் சூத்திரங்களுமே உபதேசங்கள் என்று சொல்வதற்கில்லை; அவைகளில் கதைகளும், வரலாறுகளும் கலந்தேயிருக்கின்றன.

சுத்த பிடகம்

தீக நியாகம், மஜ்ஜிம நிகாயம், சம்யுத்த நிகாயம், அங்குத் தர நிகாயம், குத்தக நிகாயம் என்ற ஐந்து நிகாயங்கள் (தொகுதிகள்) சுத்த பிடகத்தில் அடங்கியுள்ளன.

1. தீக நிகாயம்: இது ஒரு நீண்ட தொகுதி. இது சீலக் கந்தவக்கம், மகா வக்கம், பாடிக வக்கம் என்ற மூன்று வக்கங்கள் (பகுதிகள்) உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/206&oldid=1386860" இலிருந்து மீள்விக்கப்பட்டது