பக்கம்:பௌத்த தருமம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

201


பாடிக வக்கத்தில் பதினோரு சூத்திரங்கள் இருக்கின்றன. பிரபஞ்ச உற்பத்தி, நிக்ரோதருக்கும் புத்தருக்கும் நிகழ்ந்த உரையாடல், மைத்திரேய புத்தரைப்பற்றிய செய்தி, வருணங்கள், ஜைன சமயத் தலைவர் நாதாத்தருடைய மரணச் செய்தியைக் கேட்டுப் புத்தர் செய்த உபதேசம், மகான்கள், சக்கரவர்த்திகளின் 32 இலக்கணங்கள், சிங்காலனுக்குச் செய்த உபதேசம், பாவா நகரில் சாரீ புத்திரர் செய்த உபதேசம் முதலிய விஷயங்கள் அச் சூத்திரங் களில் விவரிக்கப் பெற்றுள்ளன.

2. மஜ்ஜிம நிகாயம்: இது நடுத்தர நீளமுள்ள தொகுதி. இதில் 15 வக்கங்களாக 152 சூத்திரங்கள் இருக்கின்றன. பௌடத்த தருமத்திற்குரிய பல விஷயங்களைப் பற்றிய புத்தருடைய உரையாடல்களும், பிரசங்கங்களும், சாரீ புத்திரர்-மௌத் கல்யாயனருடைய சம்பாவுணையும் அடங்கியிருக்கின்றன. சில அழகிய உபதேசக் கதைகளையும் இதிலே காணலாம். அறிவுள்ள ஆயர்கள் தங்கள் பசுக்களையும் கன்றுகளையும் ஆற்றில் இறக்கித் திறமையுடன் மறுகரையில் சேர்ப்புதையும், அறிவற்றவர்கள் அவைகளை வெள்ளத்தோடு போக விடுதலையும் உபமானங்களாகக் காட்டிப் புத்தர் பிரான் தாம் நல்லாயரைப்போல மக்களைக் கரை யேற்றிவிட வந்தவர் என்று ஒரு சூத்திரத்தில் விளக்கிக் கூறியுள்ளார். ‘அரிய பரியேசன சூத்திரம்’ என்பதில் பெருமான் தாம் அரண்மனையைத் துறந்து, வனம் புகுந்ததையும், இரண்டு ஆசிரியர்களிடம் அறம் கேட்டதையும் விவரித்துள்ளார். கபிலவாஸ்துவில் சங்கத்திற்காக அமைக்கப்பெற்ற ஒரு மண்டபத்தைத் திறந்து வைத்ததும். ஆனந்தர் அப்போது நிகழ்த்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/208&oldid=1386870" இலிருந்து மீள்விக்கப்பட்டது