பக்கம்:பௌத்த தருமம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பௌத்த தருமம்


சொற்பொழிவும் ஒரு சூத்திரத்திலே குறிக்கப் பெற்றுள்ளன. ஒன்றில் பெருமான் பிருமலோகம் போய் வந்த செய்தி கூறப்பட்டிருக்கின்றது. அவர் கோசல மன்னர் பிரசேனஜித்துக்குச் செய்த போதனையும், ஜைன சமயத் தலைவரான நாதபுத்தரால் அனுப்பப் பெற்ற உபாலி அவருடன் செய்த விவாதமும், முடிவில் உபாலி அவரை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டமையும், கொள்ளைக்காரனாகிய அங்குலி மாலனைப் பெருமான் திருத்தி ஆட்கொண்டமையும் தனித்தனிச் சூத்திரங்களிலே விவரிக்கப் பெற்றுள்ளன. உயிர்க்கொலை, புலால் உணவு ஆகியவை பற்றிப் புத்தர் ஜீவகருக்குப் போதித்தது 55-ஆவது சூத்திரத்திலுளது. கௌசாம்பியில் ஒருசமயம் பிக்குகளுக்குள்ளே பிளவுண்டாகி, அதனால் பெருமான் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதும், மீண்டும் அவர்கள் அவரையடைந்து மனம் திருந்தியதும் பற்றிய வரலாறு இரண்டு சூத்திரங்களில் அமைந்துள்ளது. மற்றும் ஆஸவங்களை அழிக்கும் வழிகள், பிக்குகள் தருமத்தின் வழித்தோன்றல்களாக விளங்க வேண்டிய முறை, அவர்கள் விரும்பத்தகாத பொருள்கள், ஆசைகள், உணர்ச்சிகள் பற்றிய விளக்கம், மனிதரைப் பிணிக்கும் ‘தச சம்யோஜனங்கள்’ என்ற விலங்குகள், சிறப்பும் செல்வமும் பெறுதலிலுள்ள அபாயங்கள், கரும நியதி, பிக்குகளின் நியமங்கள், சுவர்க்க நரகங்கள், நால்வகைத் தியானங்கள், சமயக் கொள்கைகள், வனத்தில் ஏகாந்த வாசம், பயிற்சி முறைகள் ஆகியவைகள் பல சூத்திரங்களில் விளக்கப் பெற்றிருக்கின்றன. தலைகளை ரம்பம் கொண்டு அறுக்கும்பொதும் பிக்குகள் வெகுளியை விலக்கிப் பொறுமையோடிருக்க வேண்டும் என்று புத்தர் ஒரு சூத்திரத்தில் உபதேசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/209&oldid=1386872" இலிருந்து மீள்விக்கப்பட்டது