பக்கம்:பௌத்த தருமம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

203


செய்திருக்கிறார். மானுக்காக வேடன் காத்திருப்பது போல், மனிதனைப் பற்றிக்கொள்ள மாரன் காத் திருப்பதாக ஓரிடத்தில் அவர் விளக்கியுள்ளார். பிராமணர்களையும் சாதிகளையும் பற்றிப் புத்தருடைய கருத்துக்கள் 91 முதல் 100 வரையுள்ள பத்துச் சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளன.

சம்யுத்த நிகாயம்: இது 56 சம்யுத்தங்களைக் கொண்ட ஐந்து வக்கங்களுள்ளது. ஐந்து வக்கங்களும் ஸகாதா வக்கம், நிதான வக்கம், கந்த வக்கம், சளாய தன வக்கம்,[1] மகா வக்கம் என்பவை. ஒன்றோடொன்று தொடர்புடைய சூத்திரங்களைக் கொண் டிருப்பதால் ‘சம்யுத்தங்கள்’ (இணைப்புள்ளவை) என்று கூறப்பட்டுள்ளன. இந்த நிகாயத்தில் 2889 சூத்திரங்கள் இருக்கின்றன.

புத்தர் பெருமான் காசி நகருக்கு அருகே சார நாத் என்ற க்ஷேத்திரத்திலே முதன் முதலாகத் தம்முடைய ஐந்து சீடர்களுக்குத் தரும உபதேசம் செய்து அற ஆழி உருட்டியதுபற்றிய ‘தரும சக்கரப் பிரவர்த்தன சூத்திரம்’ இதிலேயுள்ளது. மற்றும் சீல விரோதியாகிய மாரன் புத்தரையும், முக்கியமான சீடர்களையும், சில பிக்குணிகளையும், நிருவான வழியிலிருந்து பிரிக்க முயல்வது பற்றியும், தேவர்களைப் பற்றியும், நீதிநெறி பற்றியும், கந்தங்களைப் பற்றியும், புலன்களைப் பற்றியும், பெண்களின் தன்மைகள் பற்றியும் பல சம்யுத்தங்களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. முதலாவது வக்கத்திலே இனிய பாடல்கள் பல அமைந்திருக்கின்றன.


  1. சளாயதனம்—ஷடாயதனம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/210&oldid=1386874" இலிருந்து மீள்விக்கப்பட்டது