பக்கம்:பௌத்த தருமம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பௌத்த தருமம்


4. அங்குத்தர நிகாயம் : இது 11 நிபாதங்கள் என்ற பகுதிகளையுடையது; இதில் 2308 சூத்திரங்களுள்ளன. மற்ற நிகாயங்கள் பெரும்பாலும் புத்தரை மனிதராகவே கூறுவனவாயிருக்கையில், இந்த நிகாயத்திலுள்ள சூத்திரங்கள் பல அவரைத் தெய்வமாகவே பாவிக்கும்படி அமைந்திருக்கின்றன. இதிலே தம்பதிகள் வாழவேண்டிய முறைகளும், பெற்றோர்க்குச் செய்யவேண்டிய கடமைகளும், பெண்கள் இயல்புகளும், பிறப்பு, இறப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், மற்றும் பெருமானுடைய பல சம்பாஷணைகளும் குறிக்கப்பெற்றுள்ளன.

5. குத்தக நிகாயம் : சிறு நூல்களைப் பெற்றிருப்பதால் இந்த நிகாயத்திற்கு இப்பெயருண்டாயிற்று. இது 15 பிரிவுகளைக் கொண்டது. அவையாவன : குத்தக பாடம், தம்மபதம், உதாநம், இதிஉத்தகம், சுத்த நிபாதம், விமான வத்து, பேத வத்து, தேரகாதை, தேரி காதை, ஜாதகம், நித்தேசம், படிஸம்பிதா மக்கம், அவதானம், புத்த வம்சம், சரியா பிடகம்.

குத்தக பாடம்: இதில் 9 பிரிவுகள் உண்டு . இதில், ‘சரணத்தயம்’ (சரணத்திரயம்) என்ற பிரிவில் திரிசரணங்களும், தசசீல விரதங்களும் கூறப்படுகின்றன. உடலின் உறுப்புக்கள் பற்றி இரு பகுதிகளில் கூறப்படுகின்றன. புதிதாகப் பௌத்த தருமத்தை மேற்கொள்ளும் வித்தியார்த்திகள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய முறையில் பத்துக் கேள்விகளும் பதில்களும் நான் காவது பகுதியாகிய ‘குமாரபன்னா — சிறுவர் வினா-விடை’ என்பதில் அமைந்துள்ளன. ‘மங்கள சூத்தி’ரத்தில் ஒரு தேவனுடைய வினாக்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/211&oldid=1386880" இலிருந்து மீள்விக்கப்பட்டது