பக்கம்:பௌத்த தருமம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

207


செய்த நற்கருமங்களின் பயனாக விமானங்கள் பெற்ற கதைகளைக் கூறுவதாக இது அமைந்துள்ளது.

பேத வத்து: பிரே தங்கள் (ஆவிகள்) தாங்கள் முன்செய்த பாவங்களின் பயனாக அலைந்து திரிய நேர்ந்ததைக் கூறுவதாக இது அமைந்துள்ளது.

தேர காதை: 284 தேரர்கள் பாடிய பாடல்கள் இதில் தொகுக்கப் பெற்றிருக்கின்றன. பல வாழ்க்கை வரலாறுகளும், அநுபவங்களும் இப்பாடல்களில் உணர்ச்சிச் சித்திரங்களாக அமைந்திருக்கின்றன.

‘துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின்றி நாம் இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின்றித் திரிகிறோம்!’ என்று புத்தர் பெருமான் ‘தம்மபத’த்தில் கூறியுள்ளதுபோல், பகையும், கவலையும், துயரமும் நீத்த தேரர்கள் அநுபவத்தோடு பாடியுள்ள செய்திகள் மிகவும் இன்பமளிப்பவை, மனச்சாந்தியளிப்பவை.

தேரி காதை: இதுவும் ‘ தேரகாதை’யைப் போன்ற இனிய கவிதைத் தொகுதி, 100 தேரிகள் பாடிய பாடல்கள் இதில் அமைந்திருக்கின்றன.

ஜாதகம் புத்தர் போதிசத்துவராயிருந்து பல பிறவிகளெடுத்த கதைகளின் தொகுதி இது. பெரிதும் சிறிதுமாக இதில் 574 கதைகளைப் பற்றிய பாடல்கள் இருக்கின்றன ; இடையிடையே உரை நடையும் கலந்திருக்கின்றது. பொதுவாக மக்களைப் பற்றியும், விலங்குகள், பறவைகளைப் பற்றியும் பல அரிய கதைகள் இதிலேயுள்ளன. நீதிக் கதைகளும் பல இருக்கின்றன. இந்த அழகிய கதைத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/214&oldid=1386888" இலிருந்து மீள்விக்கப்பட்டது