பக்கம்:பௌத்த தருமம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

19

மாகும். மேலும் ‘புத்தர்’ என்பதும் புத்தர் ஒருவரை மட்டும் குறிப்பதுமன்று. போதியடைந்த எல்லாப் புத்தர்களையும் அது குறிக்கும்.

புத்தருடைய உபதேசங்களிலே பிரும்மா, இந்திரன், தேவர்கள், முதலியோரைப் பற்றியும், சுவர்க்கம், நரகம், தேவலோகம், துடிதலோகம் முதலியவை பற்றியும் இடையிடையே கூறப்பட்டிருக்கின்றது. இந்தத் தேவர்களையும், உலகங்களையும் பற்றிப் புத்தர் காலத்தில் நாட்டிலே மக்களிடையே உலவி வந்த கதைகளிலும், சாத்திரங்களிலும் காணப்பெற்ற விஷயங்களையே அவர் கையாண்டிருக்கிறார். பலதிறப்பட்ட மக்களுக்கு அவர் உபதேசம் செய்கையில், அவரவர் பக்குவத்திற்கு ஏற்ற கதைகள், செய்திகளைக் கூறித் தமது தருமத்தை விளக்கி வைப்பதற்காக அவைகளைக் கூறியதாகவே கொள்ள வேண்டும். தரும விரோதியாகிய மாரன் புத்தரைப் பல முறை கண்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. மாரன் நல்லன யாவற்றிற்கும் பகைவன். மரணத்தைக் குறிக்கும் ‘மரு’ என்ற அடியிலிருந்து பிறந்தது ‘மாரன்’ என்ற அவன் பெயர். அவா, அறியாமை, வெறுப்பு, வெகுளி, அடக்கமின்மை, அழுக்காறு, அயர்வு, அசத்தியம், அசிரத்தை முதலிய தீமைகளுக்கு அறிகுறியாகக் கற்பிக்கப்பட்டுள்ளவனே மாரன். அத்தீமைகளின் பயன் மரணம், அல்லது அழிவு. எனவே மாரன் அழிவுப் பாதைக்கு வழிகாட்டி. புத்தர் குறித்துள்ள தேவர்கள் யாவரும் அநித்தியமானவர்கள்; மாறுதலுக்கும், மரணத்திற்கும் உட்பட்டவர்கள் : அவர்கள் அவரிடம் வந்து உபதேசம் பெற வேண்டியவர்களாயும், பெற்றவர்களாயும் இருந்தார்கள். அவ குறித்த சுவர்க்கம், நரகம் முதலிய உலகங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/22&oldid=1386764" இலிருந்து மீள்விக்கப்பட்டது