பக்கம்:பௌத்த தருமம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

21


தொகுக்கப் பெற்றன. இச் சூத்திரங்களில் ஆங்காங்கே சில முரண்பாடுகள் காணப்பெறினும், பொதுவாகப் பௌத்த தருமத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், பிக்குகள் மேற்கொண்டு ஒழுக வேண்டிய முறைகளையும் பற்றி இவைகளிலே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு விஷயத்தையும் பரிசீலனை செய்து பார்க்கையில், ‘இது புத்தர் திருவாக்குத்தானா?’ என்று சந்தேகம் தோன்றினால், ‘எந்த விஷயமும் சரியான முறையில் தவறில்லாமல் கூறப்பட்டிருக்குமானால், அது புத்தருடைய உபதேசமென்றே கொள்ளத்தகும்’[1] என்று ‘சிட்சா சமுச்சயம்’ என்ற நூல் கூறுவதுபோல், நாம் உரையிலிருந்தே உண்மையைத் தெளிதலும் கூடும்.

உண்மையைக் கண்டுபிடித்து, அதன்படி ஒழுகுவதற்குப் புத்தர் கூறியுள்ள வழி இதுதான்:

சந்தேகம் தோன்றுவது இயற்கை. பல தலை முறைகளாகப் பல இடங்களிலே தொடர்ந்து வந்துள்ளவை என்பதற்காக மட்டும் பழைய சம்பிரதாயங்களை நம்ப வேண்டாம்; பலர் கூடிப் பேசுகிறார்கள் என்றோ, பரப்பி வருகிறார்கள் என்றோ, வதந்திகளாகிய எதையும் நம்ப வேண்டாம்; எவரோ பழங்காலத்து முனிவர் ஒருவர் எழுதி வைத்ததைக் காட்டினால், அதை நம்பி விட வேண்டாம்; நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளும் விஷயம் ஆச்சரியமானதாயிருப்பதைக் கொண்டு, அது ஒரு தேவனாலோ, வேறு அற்புதத் தேவதையாலோ, தோற்றுவிக்கப் பெற்றது என்று நம்ப வேண்டாம். ஒரு விஷயத்தைக் கண்ணால் கண்டு,


  1. ‘யத்கிஞ்சித் ஸுபாஷிதம் தத் புத்த பாஷிதம்.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/24&oldid=1386768" இலிருந்து மீள்விக்கப்பட்டது