பக்கம்:பௌத்த தருமம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

26

இந்தச் சார்புகளில், முந்திய பேதைமை, செய்கைகளால் பிறவி ஏற்படுகிறது; இப்பிறவியில் உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத் தொகுதி ஆகிய எட்டும் ஏற்பட்டு, அடுத்த பிறவிக்குக் காரணமாக அமைகின்றன. தோற்றமும் வினைப் பயனும் பிந்திய பிறவிக்கு உரியவை என்பர்.


வாயில்கள் ஆறு பொறிகள்: அவை கண், காது, காசி, கா, மெய், மனம்.

ஊறு ஆறு வகைப்படும். மேற்கூறிய ஆறு பொறிகளின் மூலம் எற்படும் தொடர்புதான் ஊறு.

நுகர்ச்சியும் ஆறுவகை: அவை மேற்கூறிய ஆறு பொறிகளின் மூலம் எற்படும் தொடர்பினால் விளையும் உணர்வுகள்.

வேட்கை என்பது அவா: இதைத் ‘தண்ஹா’ என்றும், ‘திருஷ்ணை’ என்றும் கூறுவர்.

பற்று நான்கு வகைப்படும்: ஆசைகள், கருத்துக்கள் அல்லது கொள்கைகள், யக்ஞம் பூசை முதலிய கிரியைகள், ‘நான்’ என்ற அகங்காாம் ஆகியவைகளில் பற்றுக்கொண்டிருக்கலே அந்நால்வகை.

பவம் என்ற கருமத் தொகுதி அடுத்த பிறவிக்குக் காரணமான கருமங்களின் கூட்டம். சுவர்க்கம் முதலிய உலகங்களிலோ, பூவுலகம் போன்ற உலகங்களிலோ , கட்புலனகாக உலகங்களிலோ தோன்றுவதை இது குறிக்கும்.

தோற்றம் என்பது பிறப்பு.

வினைப் பயன் என்பது மூப்படைந்து, ஆயுள் குறைந்து, அழிவுறுதல். -சுத்த நிபாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/28&oldid=1387251" இலிருந்து மீள்விக்கப்பட்டது