பக்கம்:பௌத்த தருமம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

29


கோடிக்கணக்கான புது அணுக்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. பழைய அங்கங்கள் யாவும் மாறிவிடுகின்றன. குழந்தைப் பருவத்தில் இருந்த மனிதன் வேறு, பிற்காலத்தில் விளங்கும் மனிதன் வேறு — இடையில் உருவத்திலும், குணத்திலும் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக் கின்றன. ஆயினும் அவன் எந்தப் பருவத்திலும், ‘நான்’ என்பதை மட்டும் கைவிடாமல், ஒரே ‘நான்’ என்பவனே எல்லாத் தசைகளிலும் நிலைத்திருப்ப தாக நம்புகிறான். இது வெறும் மயக்கமேயாகும்.

உலகில் எங்கும் ஜீவராசிகள் ஒவ்வொரு கணத்திலும் மாறிக்கொண்டேயிருக்கின்றன, பிறப்பிலிருந்து வாழ்க்கை வழியாக மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டேயிருக்கின்றன. மலைகள், ஆறுகள், மாட மாளிகைகள், யாவும் மாறிக்கொண்டே வந்து அழிவு விதிக்குள் அமைந்து விடுகின்றன.

மாற்றமே உலகின் நியதி. எல்லாப் பொருள்களும் உயிர்களும் அந்த விதிக்கு உட்பட்டு மாறிக் கொண்டேயிருக்கின்றன. மாற்றம் ஏற்படாது ஒரு கண நேரங்கூடக் கழிவதில்லை. ஆதலால் ஒரே உருவாக, ஒரே தன்மையுடையதாக, இங்கே நிலைத்திருப்பது எதுவுமில்லை. எனவே உலகம் சம்பவங் களின் பிரவாகமாக-இடையிடில்லாத நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே-இருந்து வருகின்றது. சங்கிலிக் கோவை போல் எல்லாம் மாற்றங்களின் தொடர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் எதுவும் காரணமில்லாமல் நடைபெறவில்லை. காரணத்திலிருந்து காரியம், காரியத்திலிருந்து அடுத்த காரணம் என்ற முறையில் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. உலகம் அனைத்திற்கும் இயற்கையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/32&oldid=1386790" இலிருந்து மீள்விக்கப்பட்டது