பக்கம்:பௌத்த தருமம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

31

துக்க நிவாரணம்

ஆசைகளை வேரோடு அறுத்து அழித்தலே ஆக்கத்திலிருந்து நீங்கும் வழி. துக்கத்தின் காரணத்தைத் தெரிந்துகொண்ட பின், அக்காரணத்தை அகற்ற உறுதி கொள்ள வேண்டும்.

அவா அறுத்தலைப்பற்றிப் புத்த பகவர் ‘தம்மபதம்’ என்ற நூலில் கூறியுள்ள சில வாக்கியங்கள் வருமாறு:

‘கலங்கிய சிந்தனைகளும்’ உணர்ச்சி வெறிகளும் இன்பத்தில் கேட்டமும் உள்ள மனிதனுக்கு அவா வளர்ந்து கொண்டேயிருக்கும் அவன் தன் கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான்.

ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது. ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள்! ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டையும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது, ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது. ஆசையற்றவனுக்குச் சோகமில்லை-பயம்தான் எது?

கருத்தில்லாமல் இருக்கவேண்டாம், மனத்தின் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும். சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போல் தீயவழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க.

‘காமிய இன்பங்களைக் கைவிட்டு, எதையும் தனதென்றுன்று கொள்ளாமல், ஞானி மனமாசுகளை அகற்ற வேண்டும்; அந் நிலையில் அவன் ஆனந்தமடைவான்.’

துக்க நிவாரண மார்க்கம்

பக்தர் பெருமான் மக்களின் துயரத்தைக்கத்தைக் கண்டு, அதன் காரணத்தையும், அதை நீக்கும் வழியையும் கண்ட கண்டுபிடிப்பதற்காகவே ஆறு வருடம் அருந்தவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/34&oldid=1387256" இலிருந்து மீள்விக்கப்பட்டது