பக்கம்:பௌத்த தருமம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

35




சீலங்கள் ஆகிய ஒழு க் க ங் க ள் பத்து: கொல்லாமை, திருடாமை வியபசாரம் செய்யாமை, பொய்யாமை, போதைதரும் பொருள்களை உண்ணாமை, இரவில் தூய உணவை மிதமாக உண்ணல், கந்தப் பொருள்கள், அணிகள், அலங்காரங்களை விலக்குதல், சயனத்திற்குக் கட்டில், பஞ்சனை முதலியவற்றை நீக்கித் தரையிலே பாய் மீது உறங்குதல், இசை, நடனம் முதலிய களியாட்டங்களைத் தவிர்த்தல், பொன், வெள்ளி ஆகியவைகளை ஏற்றுக்கொள்ளாமை, முதல் தோற்றத்தில் இச் சீலங்கள் சாதாரணமானவையாகத் தோன்றினும். இவைகளை முறையாகக் கடைப் பிடித்து வருதல் மிகவும் கடினமே. எனவே புத்தர் பிரான் இவைகளை இாண்டு பிரிவுகளாகப் பிரித்து, முதல் ஐந்து சீலங் களையும் சாதாரண இல்லறத்தார்கள் மேற்கொள்ளவும், பத்துச் சீலங்களையும் துறவறத்திலுள்ள பிக்குகள் மேற்கொள்ளவும் விதி செய்தார். பிக்குகளுக்குச் சிற்றின்பம் அறவே ஒதுக்கப்பட்டுள்ளது: செல்வத்தையும் அவர்கள் தீண்டலாகாது.


சீலங்களைப் பேணுவதால் சகல உயிர்களிடத்திலும் அன்பு ஏற்படுகிறது. கனவிலும் பிறர் பொருள்களில் ஆசை ஏற்படுவதில்லை, அழுக்காறும் ஒழிகின்றது; வாய்மையால் உள்ளம் பரிசுத்த மாகின்றது; சோம்பரையும் வெறியையும் அளிக்கும் பொருள்களை உட்கொள்ளாததால் மனம் தெளிவா யிருக்கின்றது; மிதமான தூய உணவு உள்ளப் பண்பை வளர்க்க உதவுகின்றது; துக்கம் அடர்ந்துள்ள உலகிலே களியாட்டங்களையும் காட்சிகளையும் விலக்குவதால், கருத்துடைமைக்குக் கேடு வராமல் காக்கப்படுகின்றது; அலங்காரங்களைக் கைவிடுவதால் அடக்கம் வளர்கின்றது; உண்ணல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/38&oldid=1387151" இலிருந்து மீள்விக்கப்பட்டது