பக்கம்:பௌத்த தருமம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

37


 பாசங்களும் அதிலே அடர்ந்து வளரவிட்டு விட்டால், பிறகு அந்தக் காட்டை அழிக்கவே முடியாமற் போகும். உலகிலே திடீரென்று எவரும் தீயோராவதில்லை; அதுபோலவே திடீரென்று எவரும் நல்லோராவதுமில்லை. இந்த நிலைகளை அடைவதற்குக் காரணம் பழக்கம் அல்லது பயிற்சியே. ஆகவே நல்ல வழிகளிலே இந்தப் பயிற்சியைச் செய்து வந்தால், நன்கு பேணப்பெற்ற வயல் பயனளிப்பதைப்போல், மனமும் நல்ல பயனை அளிக்கும்.

மனத்தை வைத்தே மனிதனின் வாழ்வு. மன மது செம்மையானால், மனிதனுக்கு வேறு துணை தேவையில்லை. மன மது தீமையானல், அவனுடைய அழிவுக்கு வேறு பகைவன் தேவிையில்லை. இதனால் தான் திருவள்ளுவரும், மன நலம் மன்னுயிர்க்கு) ஆக்கம்' என்றும், ‘மனநலத்தன் ஆகும் மறுமை’ ! என்றும் கூறியுள்ளார். அறத்தைப் பற்றிக் கூறுகையில், மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் என்றும அவர் முடிவு கட்டியுள்ளார்.

மனத்துக்கண் மாசுகள் உண்டாவதற்கு ஒரு முயற்சியும் செய்யவேண்டியதில்லை; அவை தாமாகவே முளைத்துக் கொப்பும் கிளையுமாகப் பணைத்து வளர்ந்துவிடக்கூடும். ஆனால் முளைத்த மாசுகளை நீக்குவதற்கு மட்டுமே முயற்சி வேண்டும். அது மட்டுமன்று, மா சுகளை நீ க் கி ய பி ன் நல்லெண்ணங்கள், விழுமிய கருத்துக்கள் மனத் திலே முளைப்பதற்கு ஒரே சிந்தனையாக அரும்பாடு படவேண்டும. அவ்வாறு முளைத்த நல்லெண்ணங்களைப் பேணிக் காத்து வளர்க்க வேண்டும். தீயவைகளை விலக்கி, நல்லவைகளை வளர்ப்பதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/40&oldid=1387126" இலிருந்து மீள்விக்கப்பட்டது