பக்கம்:பௌத்த தருமம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

41


செல்லும்: அதற்கு மேலே செல்ல முடியாமல் திரும்ப முளையருகே வந்து சேரும். பின்னால் தன் முயற்சி வீணானது என்று கண்டு அது முளையடியிலேயே படுத்துவிடும். தியான முறையில் பழக முயல்வோனைப் புத்தர் இத்தகைய கன்றுக்கு ஒப்பிடுகிறார். மன அடக்கமில்லாதவன் நல்ல விஷயம் ஒன்றைக் கருத்திற்கொண்டு தியானம் செய்ய அமர்கிறான். அந்த விஷயதான் முளை. அவன் மனம் முதலில் சுற்றிச் சுற்றித் திரிந்து வந்தாலும், சிறிது நேரத்திற்குப்பின் அந்த முளையடியில் வந்து படுத்துவிடும். இப்படியே பழகப் பழக, மனம் ஒருநிலைப்பட்டுக் குறித்த விஷயத்தலே நிலைத்து நின்றுவிடும்.

பெளத்த நூல்கள் மனத்தை ஒளியளிக்கும் தீபச் சுடருக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றன. இதுமிகவும் பொருத்தமானதே. மனத்தின் ஒளியினாலேயே - ஒளிச் சக்தியினாலேயே-மனிதனின் காரியங்கள் யாவும் நடந்தேற வேண்டும். சாதாரண மனிதனின் மனத்தில் இந்தச் சுடர் நிலையாக நிற்பதே யில்லை. பல சிந்தனைகள், தீய கருத்துக்கள் ஆகிய காற்றினால் இச்சுடர் அடிக்கடி நடுங்கி ஆடுகின்றது; பல சமயங்களில் அணைந்தும போகின்றது. ஒரு விநாடி நேரத்தில் இலட்சக் கணக்கான முறை இப்படி நேருகின்றது. இவ்வாறு நேராமல், உள்ளத்தின் ஒளி குன்றாமல் சுடர் விட்டுக் கொண்டிருக்கத் தியானமே உற்ற துணையாகும்.

சித்தத்தை ஒருநிலைப்படுத்தும் தியானத்தினால் விளையும ஆற்றல் அல்லது சக்தியினாலேயே மனித உடல் இயங்குகின்றது. சிறு குழந்தை நடக்க முயல்வது. புதுப் புதுச் சொற்களைப் பேசப் பழகுவது முதலியவற்றைக் கவனித்தால், அவைகளும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/44&oldid=1387063" இலிருந்து மீள்விக்கப்பட்டது