பக்கம்:பௌத்த தருமம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெளத்த தருமம் உள்ளத்தைச் சுத்தம் செய்தால், மனிதனின் சிந்தனையும், பேச்சும், செயலும், வாழ்வு முழுதுமே சுத்தம கி விடும். பின்னர் அவனிடம் நான் என்னும் ஆணவப் பேய்க்கு இடமிராது. ஆணவம் ஒழியும் போது சுயநலம் அறவே ஒழிந்து ஆசைகள் அவிந்து அறியாமையும் அடியோடு ஒழியும். இந்த முறையே துக்கத்தை நீக்க ஏற்ற வழி. மனே தத்துவத்தைப் பற்றி 2, 00 ஆண்டுகட்கு முன்னர் புத்தர் பெருமான் ஆராய்ந்து கூறியுள்ள விவரம் இன்றுவரை அறிஞர்களால் பாராட்டிப் புகழப் பெறுகின்றது. விஞ்ஞான வளர்ச்சி பெருகி யுள்ள இக் காலத்திலும் அது பொருத்தமாயுள்ளது. பெருமானுடைய உளநூல் ஆராய்ச்சி முறையைப் பற்றிப் பண்டி த ஐ வாஹர் எால் நேரு, ' விஞ்ஞான சாத்திரங்களில் மிகவும் நவீன மாகவுள்ள இந்தச் சாத்திரத்துள்ளே அவருடைய நுண்ணிய விசாரணை எவ்வளவு ஆழமுடையதாக விளங்கிற்று என்பதைக் கான வியப்பாகவே யிருக்கின்றது என்று குறித் துள்ளார். இதே போலப் புத்தருடைய தத்துவ விளக்கத்தைப் பறறியும் அவர் பாராட்டியுள் ளார். நவீன காலத்துப் பெளதிக நூல், நவீன தத்துவ ஞானம் ஆகியவற்றின் சில கொள்கைகளோடு அவ் விளக்கத்திற்கு எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை -ബ്-- . . * * ... It is surprising to sind how deep v. as his insight 'nto this latest of modern scic:.ccs. —"Discovery of India' — Jawaharlal Nehru.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/47&oldid=849151" இலிருந்து மீள்விக்கப்பட்டது