பக்கம்:பௌத்த தருமம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் இயல் அஷ்டாங்க மார்க்கம் "துன்பம் தோற்றம் பற்றே காரணம்; இன்பம் வீடே பற்றிலி காரணம்...' -மணிமேகலை மெய்ஞ்ஞானம் பெறுவதற்குப் புத்தர் பெருமான் வகுத்துள்ள தத்துவங்கள் அல்லது நியமங்கள் முப்பத்தேழு. அவை ஏழு பிரிவுகளில் அடங்கி யுள்ளன. அவையாவன: பா வி மொழியில் (1) நான்கு ஸதிப்பி ஸ்தானங்கள் - வதிபட்டானங்கள் (2) நான்கு ஸம்யன் பி தானங்கள் - ஸம்மப்பதானங்கள் (3) நான்கு இருத்தி பாகங்கள் - இன் கிபாகங்கள் (1) ஐந்து இந்திரியங்கள் - இக் கிரியங்கள் (5) ஐந்து பலங்கள் - பலங்கள் (6) ஏழு போத்தியாங்கங்கள் - போஜ்ஜங்கங்கள் (7) அஷ்டாங்க மார்க்கம் - ஆரிய அட்டாங்கின ப0 ம இவைகளைப் பற்றி அபிதரும பிடகத்தில் விரி வான விளக்கங்களைக் காணலாம். இவைகளே பெளத்த தருமம் விதித்துள்ள ஒழுக்க இயலாம். இவைகளை நன்கு தெரிந்துகொண்டு, கருத்தோடு கடைப்பிடித்து வந்தால், உள்ளத்தின் மலங்களைப் போக்கிப் பரிசுத்தமடைந்து, நன்மை பெருகி, மேலான ஆற்றல்களைப் பெற்று, போதியடைந்து, முடிவாகத் துக்கத்தை அறவே நீக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/52&oldid=849163" இலிருந்து மீள்விக்கப்பட்டது