பக்கம்:பௌத்த தருமம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஷ்டாங்க மார்க்கம் 49 ஒயாமற் பொய் சொல்வார், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற தாயாரை வைவர், சதிஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்(கு) உப காரம்செய்யார், தமை அண்டினர்க்(கு) ஒன்று * ------ ۴/rا ۳ என்று பட்டினத்தடிகள் பரிதாபத்துடன் கூறும் மாக்கள் இந்த எட்டு முறைகளையும் கையாண்டு வந்தால், உயர்ந்த மக்களாகிவிட முடியும். உயர்ந்த பண்புகள் பெறுவதுடன், அவர்கள் .ெ ம ய் யறி வு பெற்று. இனிப் பிறவாத பேரின்ப நிலையையும் அடைய முடியும். அசுவகோஷர் விவரித்துள்ளது போல, நிருவான வழியில் செல்பவனுக்கு நற்காட்சியே ஒளியளிக்கும் தீபம்; நல்லூற்றமே வழிகாட்டி, நல் வாய்மையே இடை வழியில் த ங் கு மி ட ம் , நற் செய்கையே அவன் நிமிர்ந்து நிற்கும் நிலை; நல் வாழ்க்கையே பிரயாணத்தில் அருந்தும் உணவு; நல்லுக்கமே அவனது நடை, நற்கடைப்பிடியே அவனது சுவாசம், நல்லமைதியே அவன் சாந்தி யுடன் இளைப்பாறும் கட்டில். இனி அஷ்டாங்க மார்க்கத்தின் படிகளை ஒவ் வொன் ருகக் கவனிப்போம். நற்காட்சி: மனிதனுடைய தனிப் பெருமை பருத்தறிவு. மனிதனைத் தவிர வேறு எந்தப் பிராணி யும் தனது அநுபவத்தைத் தன்னிடமிருந்து வேருகப் பிரித்து, அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தன்ஃனயே சாட்சியாகவும் கருத்தாவாகவும் கருதி, 'நான் இதைச் செய்கிறேன்’ என்று வேறு எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/54&oldid=849167" இலிருந்து மீள்விக்கப்பட்டது