பக்கம்:பௌத்த தருமம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

53



புத்தர் பெருமான் சமய வாழ்க்கையின் முதற் படியாக நற்காட்சியை அமைத்திருப்பதன் காரணம் என்ன? அதைக்கொண்டுதான் துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய அவர் அருளிய நான்கு வாய்மைகளையும் பற்றி அறிநதுகொள்ள முடியும். அப்படி அறிந்து கொள்வதே நற்காட்சி என்று அவர் கூறியுள்ளார். நற்காட்சி யிஞலேயே ஒவ்வொருவரும், ‘நான்’ என்ற ஆணவம் வெறும் கானல் நீர் என்றும், எல்லா உயிரும் ஒன்றே என்றும், இந்த உயிர் கரும நியதிக்கு உட்பட்டிருப்பது என்றும், வாழ்க்கை துக்க மயம் என்றும் கண்டுகொள்ள முடியும். கல்வியும் ஞானமும் இல்லாமல் நற்காட்சி ஏற்பட முடியாது. கல்வி என்றால் வெறும் எழுத்தறிவன்று – மனத்தை ஒருநிலைப்படுத்தும் தியானம்வரை கொண்டு செல்லும் வித்தையையே கருத்திற் கொள்ளல் வேண்டும். பேதைக்கு நற்காட்சி அரிது:

‘கற்றான் தளரின எழுந்திருக்கும்; கல்லாத

பேதையான் வீழ்வானேல், காலமுரியும்.

[1]

மெய்யான கல்வியுடையவர்களுக்கே–வித்தையில் தேர்ந்தவர்களுக்கே–ஞானமும், அதிலிருந்து தனிததனியாகப் பிரித்தறியும் விஞ்ஞானமும், விஞ்ஞானத்திலிருந்து ஒழுக்கம், தவம், தியானம் முதலியவைகளும் முறையாக உண்டாகின்றன.

நற்காட்சி பற்றித் திருவள்ளுவர் கருத்தைத் தெரிவிக்கும் குறள் வருமாறு:

‘இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.’

  1. ‘நான்மணிக்கடிகை’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/58&oldid=1386956" இலிருந்து மீள்விக்கப்பட்டது