பக்கம்:பௌத்த தருமம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெளத்த தருமம் தன் அாற்றம்: 'நல்லுாற்றம் என்பது என்ன, பிக்குகளே? (புலன் இன் பங்களைத்) துறத்தல், மனக் காழ்ப்புக் கொள்ளாமை, அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக நிற்றலேயாகும்' என்று புத்தர் கூறி யுள்ளார். மனிதன் எதில் நாட்டம் கோள்ள வேண்டும், எதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பது இதல்ை விளக்கப்பெற்றுள்ளது. வாழ் விலே இன்பங்களைத் தேடித் திரிந்தால், துன்பங்கள் பலவாக அடர்ந்து வந்து பற்றிக்கொள்கின்றன. ஆகவே புலன்களால் வரும் இன்பங்களைத் துறக்கப் பழக வேண்டும். பிறரால், பிற உயிர்களால் ஏற்படும் தீமைகள், இன்னல்களை யெல்லாம் மனத்திலே பதியவைத்துக்கொண்டு காழ்ப்புக் கொள்ளலாகாது. என்னே tங் கி. கான் என்னை அடித்தான். என்னை வென்ருன் என்னே கொள் ளையிட்டான்'- இத்தகைய எண்ணங்களை உடையாரிடம் துவேஷம் நீங்காது நிலைத் திருக்கும்’ - என்று தம்மபதம்' கூறுகின்றது. இன்னு செய்தார்க் கும் நன்னயம் செய்யவேண்டு மென்றும், புண்ணில் தியை வைப்பது போன் இன்ன லிழைக்கப்படும் போதும் வெகுள திருத்தல் ந ல .ெ ம ன் று ம் நாயனரும் அறிவுறுத்தியுள்ளார். எந்த உயிர்க்கும் கேடு செய்யாமலும், செய்ய எண்ணுமலும் இருப்ப தோடு, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தப் பழகுவதே உண்மையான அஹிம்சை, ஆகவே நல்லுற்றம் என்பது சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட உன்னதமான ஆசைகளை வளர்த்தல் என்று காணப் பெறுகின்றது. நல்லுற்றம் நல் விருப்பங்கள் என்றும், நல் ஆர்வம் என்றும், நற் சிந்தனை என்றும் பலவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/59&oldid=849177" இலிருந்து மீள்விக்கப்பட்டது