பக்கம்:பௌத்த தருமம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பெளத்த தருமம்


பயங்கரமூர்த்திகளாயும், அழகு வழியும் ஆனந்த மூர்த்திகளாயும், உலகிலே சந்திகளிலும், வீதிகளிலும், சாலைகளிலும், சோலைகளிலும் விளங்கும் சிலைகளை யெல்லாம் வணங்கிக் கொண்டிருந்தால், அவன் கால மெல்லாம் விணாவதோடு , கருமத் தொகுதியும் பெருகிக்கொண்டே யிருக்கும். நீர், நெருப்பு, வாயு, வானம், பூமி முதலியவைகளிலே விளங்கும் எண்ணற்ற தெய்வங்கள், தேவதைகளைப் பற்றிய கதைகளிலே அவன் மனம் நாடலாகாது. அவன் வணங்கவேண்டிய தேவதைகள் அன்பு, தயை, அருள் முதலியவைகளே. செய்யத்தகாத பாவங்களை யெல்லாம் செய்துகொண்டே ஒருவன் சில பக்திப் பாடல்களைப் பாடிப் பஜனை செய்து விட்டும், சில மந்திரங்களை முணுமுணுத்துவிட்டும், பேரின்ப நிலைக்குப் பறந்து பாய்ந்துவிட முடியாது. புனித வாழ்வுக்கோ, நிருவானப் பேறறுக்கோ குறுக்கு வழி கிடையாது; நீதியால் வந்த நெடிய தரும நெறியே அவற்றிற்குரிய பாதை. தாயுமானவர் உடலைக் ‘காமவேள் நடனசாலை’ என்றார். சமயவாழ்வில் ஈடுபடும் உபாசகனோ, துறவியோ, கருத்தை மயக்கும் ஆடம்பரமான தத்துவங்களை நம்பிக்கொண்டு, காமவேளின் நடனசாலையைப் பேய்களின் நடனசாலையாக மாற்றிக் கொள்ளக் கூடாது.

அறத்தில் ஆர்வமுள்ளவன், ஆசைகளை அறுப்பதில் ஆசை கொண்டவன், தெளிந்த அறிவும், குறிக்கோளில் கருத்தும், இடைவிடாத ஊக்கமும் கொண்டு முயற்சித்து வந்தால், சந்தேகங்களும், மயக்கங்களும், போலித் தத்துவங்களும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் துக்கத்தை மாற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/61&oldid=1386970" இலிருந்து மீள்விக்கப்பட்டது