பக்கம்:பௌத்த தருமம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்.டாங்க மார்க்கம் 59 பிக்குகளே, அதுவே நல்வாய்மை எனப்படுவது!" என்பது புத்தர் திருவாக்கு. எவர்க்கும் எத்தகைய திமையும் இல்லாத சொற்களே வாய்மை யென்று நம் வ ள் ளு வ ர் விளக்கியுள்ளார். சிந்தனையி லிருந்தே பேச்சுப் பிறப்பதால், முதற்கண் நற்காட்சி யும், நல்லுாற்றமும் கூறப்பட்டன. த வ ரு ன சிந்தனையிலிருந்து தவருண பேச்சே வெளிவரும், அதிலிருந்து தவருண செயல் விளையும். நாள் தோறும் வாழ்க்கையில் மக்கள் சிறிதும் கருத்தில்லாமல் கூறும் புளுகுகளும் பொய்களும் எத்தனை! நீதி மன்றங்களிலே கூறும் அசத்தியங் கள் எத்தனை! தொழில்களிலும், வாணிபத்திலும் பொய்களுக்கு ஒரு வ ைர ய ைறயே யில்லாம லிருக்கிறது. இத்தகைய பொய்மைகள் அனைத் திற்கும் நல்வாய்மையில் இடமில்லை. வாய்மை என்பது வாயின் தன்மை - உண்மையே வாயின் இயல்பு " என்று தமிழர் முன்பே வகுத்துள்ளனர். நல்வாய்மை நயம்பட உரைத்தலுமாம். பேச்சில் அன்பும் மரியாதையும் கலந்திருக்கவேண்டும். வசை மொழி, பிறரை நோவச் செய்யும் கடுஞ்சொற்கள், முன்ல்ை நிற்கும்போது உளம் கனிய உரையாடி விட்டுப் பின்னல் இழித்துரைக்கும் பேடித்தன்மை ஆகியவைகளை அ ற வே விலக்கிப் பழகவேண்டும். கனிகள் பல இருக்கப் புளிக்கும் காய்களை உண்ண லாகாது: அதுபோல மக்களினத்தை ஆதரத்துடன் அனைத்து வாழ்த்தக்கூடிய எ ண் ண ற் ற இனிய சொற்கள் இருக்கும்போது, இன்னுச் சொற்களை

  • வாயின்தன்மை வாய்மை என்பதுபோல் உள்ளத்தின் தன்மை உண்மையாயிற்று மெய்யின் தன்மை மெய்ம்மை யாயிற்று.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/64&oldid=849189" இலிருந்து மீள்விக்கப்பட்டது