பக்கம்:பௌத்த தருமம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பெளத்த தருமம்



ஏன் பேசவேண்டும்? பிறர் நம்மை நிந்தித்தால், அந்தத் தீமை அவர்களையே சாரும்படி விட்டுவிவேண்டும். நாம் பதிலுக்கு ஏசினால், அக்குற்றம் நமக்கு வந்துவிடும். புத்தர் பெருமான் ஒருசமயம் பிட்சைக்குச் சென்றிருக்கையில், இல்வாழ்வோன் ஒருவன் அவரைப் பார்த்து நிந்தை மொழிகளைக் கூறினான் பிட்சையளிக்காமல், அவன் நிந்தனையையே அவருக்குத் தான மளித்தான். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். " அப்பா! உனது நிந்தனையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது; அது உன்னி டத்திலேயே இருக்கட்டும்! என்றார், கிருகஸ்தன் திகைத்தான். நீ பிட்சை யளித்து. அதை நான் வேண்டாமென்று மறுத்துவிட்டால், அது யாரைச் சார்ந்தது? உன்னையே சாரும். அது போல நீ யளித்த நிந்தனையை நான் அங்கிகரிக்கவில்லை. அது உன்னிடமே யிருக்கட்டும்! " என்று பெருமான் விளக்கியுரைத்தார். நிந்தைக்கு நிந்தை. ஏச்சுக்கு ஏச்சு என்ற முறையை மேறகொள்ள நல்வாய்மையைக் கடைப்பிடிப்பவனுக்கு உரிமையில்லை.


சொல்லின் சிறப்பைப் பற்றியும், முறையைப் பற்றியும் தி ரு வ ள் ளு வர் ‘இனியவை’ கூறல், ‘சொல்வன்மை’, ‘பயனில சொல்லாமை', 'புறங்கூறாமை', ' வாய்மை' என்ற ஐந்து தனி அதிகாரங்களிலும், பிறவிடங்களிலும் விளக்கிக்கி கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் யாவர்க்கும் நன்னெறி காட்டுபவை. மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச் சொற்களில் வஞ்சனையின் வாசனை இராது, அவை அன்பிலே தோய்ந்து வரும் இனிய சொற்களாம். பணிவும் இன்சொல்லுமே ஒருவனுக்கு அழகு தரும் அணிகளாம். எதைக் காக்காவிடினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/65&oldid=1387003" இலிருந்து மீள்விக்கப்பட்டது