பக்கம்:பௌத்த தருமம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

61




நாவைக் காத்துவர வேண்டும். பண்புடையவர்கள் பயனற்ற சொற்களைக் கூறிவந்தால், அவர்களுடைய சீர்மையும் சிறப்பும் நீங்கிவிடும். பயனற்ற பேச்சிலேயே பழகியவன் மனிதனல்லன் - அவன் மக்களிலே பதர். வாய்மையைப்பற்றி வள்ளுவ முனிவர், 'பொய்யா விளக்கே விளக்கு என்றும், ' பொய்யாமை அன்ன புகழில்லை என்றும் பலவாறாகப் போற்றி யுரைத்துள்ளார். நல்லவற்றை நாடி, இன்சொற்கள் பேசிவந்தால், அல்லவை (பாவங்கள்) தேயும், அறம் பெருகுமென்றும் அவர் வழி காட்டியுள்ளார்.

"நாற்றம் உரைக்கும் மலர்உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும் வினைநலம்.....”

[1]*


நற் செய்கை: நற்செய்கை யாதெனில், உயிர்க்கொலை, தமக்கு அளிக்கப் பெறாதவைகளைக் கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விலகல்' என்று புத்தபகவர் தெரிவித்துள்ளார். உயர்தர வாழ்க்கையில் நோக்க முள்ளவன், அதற்கு முரணாயுள்ளவை அனைத்தையும் விலக்கி, நன்மையானவற்றையும் மேன்மையானவற்றையுமே செய்துவருவான். உள்ளத்தையும் நாவையும் நன்னிலையில் நிறுத்திக்கொண்டவனுடைய செய்கையும் நல்லதாகவே அமையும். புனித ஆறுகளிலும் குளங்களிலும் குளிப்பதால் புண்ணியம் வந்துவிடாது; கொல்லாமை முதலிய , சீலங்களை வளர்த்துக் கொள்வதாலேயே புண்ணியம் பெறமுடியும். தீவினைகளை விலக்கிவிட்டாற் போதாது, நல்வினைகளை ஊக்கத்தோடு செய்து


  1. நான்மணிக்கடிகை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/66&oldid=1387026" இலிருந்து மீள்விக்கப்பட்டது