பக்கம்:பௌத்த தருமம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெளத்த தருமம் கரும பலன்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கருதுகிரு.ர்கள். தவருன முறையிலே பெறும் பொருளெல்லாம் களவால் வந்ததாகவே கருதலாம். பிறர் பொருளை உள்ளத்தால் நினைத்தலும் திதாகும். பிறனுடைய செல்வத்தை மனத்தாலும் விரும்பாமையே நம் செல்வத்தைப் பேணும் முறை. இதே போலக் காம இன்பத்திலும் முறைதவறி நடத்தலாகாது. பிறர் மனை விரும்புதல், விலைமாதர் தொடர்பு முதலிய வற்றை நற்செய்கை விரதத்தை மேற்கொண்டவன் ஒதுக்கிவிட வேண்டும். பொதுவாகப் புலன்களின் இன்பமாகிய வஞ்சனை வலையிலே சிக்கிக்கொள்ளாது அவன் தன் செயல் ஒவ்வொன்றிலும் கண்னும் கருத்துமா யிருக்க வேண்டும். அவன் .ெ ச ய் யு ம் ஒவ்வொரு வினையும் தூயதா யிருக்க வேண்டும். வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் ' என்றும். ' என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு நன், பயமா விக்ன . என்றும் வள்ளுவர் வகுத்துள்ளார். நல்வாழ்ககை: ' தவருன வழியில் வாழ்க்கை நடத்துவதை விட்டு, நியாயமான முறையில் ஆரியச் சீடன் தன் ஜீவனத்திற்கு வேண்டிய வருவாயைப் பெறுகிருன்-பிக்குகளே, அதுவே நல் வாழ்க்கை' என்று புத்தர் அருளியுள்ளார். இது மிகச் சுருக்கமான உபதேசமாகத் தோன்றினும், 1927-ல் கொழும்பு நகரில் ஆற்றிய பொழிவி உள்ளது. f பெளத்த உபாசகன் அல்லது பிக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/69&oldid=849197" இலிருந்து மீள்விக்கப்பட்டது