பக்கம்:பௌத்த தருமம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

65


மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வோர் உயிரும் உலகில் வாழப் பிறந்ததே; ஒவ்வொரு மனிதனும் வாழு உரிமை பெற்றவன். ஆனால் மனிதன் தன் வாழ்வுக்கு வேண்டிய தொழிலை மேற்கொள்வதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அவன் தானும் தன் குடும்பத்தாரும் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுத்து நடத்தும் தொழிலால், தனக்கு ஊதியம் கிடைக்கும்படியும், தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் நன்மை பெருகும்படியும் செய்தல் முதல் வகை. இரண்டாம் வகை சமுதாயத்தின் நலத்தைப் புறக்கணித்துவிட்டுத் தன்னலம் ஒன்றையே கருதுவது. இந்த இரண்டாவது முறையைப் பலரும் கையாள்வதால், கோடிக்கணக்கான மக்களுக்கு இடையூறு ஏகப்படுகின்றது. சிலர் மட்டும் தம் தொழில்களில் பேயாடிக் கணக்கான செல்வத்தைப் பெறும்போது, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியும் பசியுமாகத் துன்புற வேண்டியிருக்கின்றது. பெருந்தொழில்களிலும், வாணிபத்திலும் பிறரை வஞ்சித்துப் பொருள் ஈட்டுதல் சாதாரணமாகி விட்டது. ஒவ்வொருவனும் தன்னலம் ஒன்றையே கருதும்போது, அவனைச் சூழ்ந்து வசித்துவரும் மக்களின் நலம் பாழாகின்றது.

புலால் விற்றல், மீன் விற்றல், வெட்டுவதற்காக விலங்குகளை விற்றல், மது வகைகளையும் மற்றும் இலாகிரிப் பொருள்களையும் விற்றல், விஷப்பொருள்கள், கொலைக் கருவிகள் முதலியவைகளில் வாணிபம் செய்தல், மனிதர்களை (அடிமைகளாக) விற்பனை செய்தல் முதலியவையெல்லாம் விலக்கப்பட்ட ஜீவனோபாயங்கள். இவை ஒருகாலும் நல்வாழ்க்கை ஆகமாட்டா. எந்த உயிருக்கும் தீமையாயில்லாத தொழிலே நல்வாழ்க்கையில் அமையும். ஜோசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/70&oldid=1387057" இலிருந்து மீள்விக்கப்பட்டது