பக்கம்:பௌத்த தருமம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெளத்த தருமம் ஆருடம், மாந்திரிகம், வேடம் புனைந்து ஆடுதல் முதலிய தொழில்களும் தீவினையின்பாற் பட்டவை. பாமர மக்களையும், துயரத்தில் உழலும் மக்களையும் ஏமாற்றி, எதையும் செய்து, எவ்வகையிலும் பணம் தேடுதல் கேடு விளைக்கும் வினையேயாம். சட்டமும், அதிகாரிகளும், நீதிமன்றமும் தலையிடாதவரை, எந்த அக்கிரமத்தையும் செய்யலாம் என்று துணிதல் முறையன்று. ஒவ்வொருவரும், தம் உள்ளத்தையே நீதிபதியாகக் கருதி, அதை வஞ்சியாமல் நேர்மை யான தொழிலைச் செய்து வரவேண்டும். புத்த ருடைய சீடன் பொன்னைப் பார்க்கிலும் சிலமே மேலெனக் கொள்ள வேண்டும். நேர்மையாகத் தொழில் செய்துவரும் மக்கள் தான தருமங்களில் முதன்மையாக நிற்பர். 'இம் மி அரிசித் துணையானும் வைகலும் 4 ம் மில் இபை வ கொடுத் துண் மின் என்று நாலடியார் கூறுவதுபோல், பசியோடு வாடும் மக்களை முதலிலே கவனிக்கவேண்டும். பேரறிவாான் பெற்ற செல்வம், ஊருணி நீர் போல் யாவர்க்கும் பயனளிக்கும். நல் அாக்கம்: இதைப்பற்றிப் புத்தர் பெருமான் கூறியுள்ளது வருமாறு: 'பிக்குகளே! இதிலே, இதற்கு முன் தோன்றியிராத ஒழுக்கக் குறைவான நிலைமைகள் எழாதபடி சித்தஉறுதியை ஏற்படுத்திக் கொள்கிருன்: அவன் முயற்சி செய்கிருன், (அதற் குரிய) ஆற்றலைப் பயன்படுத்துகிருன், உள்ளத்தை (அதன்மீது) செலுத்திப் போராடுகிருன். இதே போல, ஏற்கனவே எழுந்துள்ள திய ஒழுக்கக் குறை வான நிலைமைகளை நீக்குவதற்கும் அவ்வாறே செய்கிருன். இதே போல, இதுவரை தோன்றி யிராத நல்ல நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/71&oldid=849201" இலிருந்து மீள்விக்கப்பட்டது