பக்கம்:பௌத்த தருமம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பெளத்த தருமம்


போல், உலகப் பொருள்களையும், நம் வாழ்வையும் பற்றிய உண்மைகளை உணர்ந்து, அவைகளைப்பற்றி ஆர அமரச் சிந்தனை .ெ ச ய் வ தி ல் பயிற்சி பெறாதிருந்தால், திடீரென்று ஆசைப் புயலும் மழையும் நம்முள்ளே நுழைந்துவிடும்.

‘நன்கு பழக்கப்பட்ட குதிரை, சவுக்கு மேலே பட்டதும் வேகமாக ஓடுவதுபோல், சிரத்தையுடனும், தீவிர முயற்சியுடனும் இருப்பாயாக. நம்பிக்கையாலும் நற்சீலங்களாலும், வீரியத்தாலும், தியானத்தாலும், தருமத்தை ஆராய்ந்த நிச்சயத்தாலும், ஞானம், ஒழுக்கம், கருத்துடைமை ஆகியவற்றில் நிறைவு பெற்று (உலக வாழ்வான) இந்தத் துக்கத்தை ஒதுக்கிவிட முடியும்.’

இவ்வாறு புத்தர் ‘தம்மபத’த்தில் அறிவித்துள்ளார். பிறரை அடக்கி வெல்வது எளிது, தன்னைத் தான் அடக்கி வெல்வதுதான் உலகிலே சிரமமான காரியம். அதனால்தான் விழிப்போடிருந்து பயிற்சி செய்யவேண்டும் என்று பலமுறை வற்புறுத்தப்படுகின்றது. சோர்வில்லாதவர்களுக்கு அரியவை என்று எதுவுமில்லை. ஒருவன் எண்ணியதை இடைவிடாமல் சோர்வின்றி எண்ணி வந்தால் எளிதில் வெற்றியடைவான் என்பதைத் திருவள்ளுவரும்,

‘உள்ளியது எய்தல் எளிது மன், மற்றும் தான்

உள்ளியது உள்ளப் பெறின்’

என்ற குறளில் குறித்துள்ளார். நாம் நினைப்பது, பேசுவது, செய்வது முதலிய விஷயங்களைக் கவனித்து, அவைகளிலே நல்லவை, தீயவை, இரண்டுமற்றவை எவையெவை என்று குறித்துக் கொண்டே வரவேண்டும். அவைகளில் சுயநலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/75&oldid=1386895" இலிருந்து மீள்விக்கப்பட்டது