பக்கம்:பௌத்த தருமம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

71

ஆணவம் , துராசைகள் முதலியவை இருக்கின்றனவா என்று பார்த்துப் பார்த்து அவைகளை நீக்கிவர வேண்டும்.

உடல், மன உணர்ச்சிகள், புலன் உணர்வுகள் ஆகியவற்றின் உண்மையான தன்மைகளை உணர்ந்து, அவைகளைப் பற்றிச் சிந்தனை செய்து பயிற்சி பெறவேண்டும் என்று புத்தர் கூறியுள்ளார். உடல் சம்பந்தமான உண்மையைப் பற்றி ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். சாதாரணமாக ஒருவனது உடலைப் பார்த்தால், அதன் தோற்றம் அழகு முதலியவற்றையே நாம் கருதுவோம். புத்தர் கண்ணுக்கு மனித உடல் எப்படிக் காட்சி யளித்திருக்கிறது? அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி, ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப்பட்டிருக்கிறது: இதிலே வசிக்கின்றன. முதுமையும்,மரணமும், கர்வமும், கபடமும் என்று அவர் தம் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ‘இந்த உடலாகிய வர்ணம் தீட்டிய பொம்மையைப் பார்!’ * என்று உடலைப் பொம்மையாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு காண்பதே உண்மையபன தன்மையை உணரும் வழி.

நல்லமை: இது மேலே கூறிய ஏழு படிகளுக்கும் சிகரமாகும். ஞானத்தினால் நன்மை தீமைகளைப் பாகுபடுத்தி அறிந்து கொள்ள முடியுமே தவிர, அதனால் மனத்தை ஒருநிலைப் படுத்திவிடமுடியாது. வெளியே ஒடித் திரியும் மனத்தை ஒரே நிலையில் அமர்ந்திருக்கச் செய்வது ஓர் அரிய கலை. அதைத் தியானம், சமாதி, யோகம் என்ற பெயர்களால் குறித்து வருகிறோம். உலகில் எத்தனையோ


  • ‘தம்மபதம்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/76&oldid=1386906" இலிருந்து மீள்விக்கப்பட்டது