பக்கம்:பௌத்த தருமம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஷ்டாங்க மார்க்கம் 77 அவற்றின் நிலையில்லாத் தன்மையை அறிய இது உதவுகின்றது. சிந்தனைகளிலே உணர்ச்சி காரண மானவை, உணர்ச்சியற்றவை, கோபச் சிந்தனைகள், கோபமற்ற சிந்தனைகள், அற்பச் சிந்தனைகள், உன் தச் சிந்தனைகள் என்று பிரித்துப் பார்க்கும் முறைகளை இதில் அறியலாம். 4. கருமானு பாஸன: அவா, வெறுப்பு, மயக்கம், கர்வம், பொய்க்காட்சி ஆகிய ஐந்து தளைகளையும், மெஞ்ஞானம் பெறுவதற்குரிய எழு போத்தியாங்கங் களேயும், ஐந்து கந்தங்களையும், ஆறு புலன்களையும் பகுத்துப் பார்த்துப் பரிசீலனை செய்யும் வழிகளை இது கூறும். எபம்யக் ப்ர தானங்கள் அஷ்டாங்க மார்க்க விவரத்தில் நல்லுக்கம் என்ற தலைப்பின் கிழே கூறப்பெற்றுள்ள நான்கு முறைகளே இவை. மனத்தில் திய எண்ணங்கள் தோன்ருமல் தடுத்தல், முன் தோன்றியுள்ள திய எண்ணங்களை அகற்றல், நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்தல், முன் தோன்றிய நல்ல எண் கனங்களைப் பேணி வளர்த்தல் ஆகிய நான்கு பிரிவு களாக உள்ளவை இவை. இருத்தி பாதங்கள் t இவை நான்கு: சந்தம், விரியம், சித்தம், மீமாம்சை. இவற்றுள் சந்தம் என்பது உள்ள ஒருமைப்பாட்டுடன் மனே தத்துவ ஆற்றலின் சிகரத்தை அடையவேண்டும் என்னும் விருப்பத்தை - '80-ஆம் பக்கம் பார்க்க. . .3053:5urāsālassir — Foundations of psychical *tivity: urge, energy, thought, investigation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/82&oldid=849213" இலிருந்து மீள்விக்கப்பட்டது