பக்கம்:பௌத்த தருமம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

79


இங்கே பூர்வ ஜன்மங்களின் விவரங்களை நினைவுறுத் திக்கொள்ளும் ஆற்றலை விசேடமாகக் கொள்ள வேண்டும்.

சமாதி: அஷ்டாங்க மார்க்க விவரத்தில் நல் லமைதி என்ற தலைப்பின் கீழே இது குறிப்பிடப் பெற்றுள்ளது.

பிரஞ்ஞை: மனோதத்துவ முறையில் படிப்படியாக முன்னேறி, மனம் பூரணமான பரிபாகம் (முதிர்ச்சி) அடையும் பொழுது, சமாதியின் பயனாகப் பேரறிவு தோன்றுகிறது. அவ்வறிவு சாதாரண அறிவுக்கு மிகவும் மேம்பட்டது, பிரபஞ்ச இயல்புக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்பெறும். ஸதி, சமாதி, வீரியம், பிரஞ்ஞை ஆகியவை ஒருங்கே சேர்ந்து அபரிமிதமான இச்சா சக்தியை அளிக்கின்றன. பேரறிவு உதயமான பின், ‘நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்?’ என்பன போன்ற விஷயங்களைப் பற்றி யாதொரு ஐயப்பாடும் இராது. துக்கத்தின் மூலகாரணமான அறியாமையும்—அவித்தையும்—அத்துடன் அடியோடு அழியும், நிருவாணத்தைப் பற்றிய உண்மையையும் நேர் முகமாக உணரலாகும்.

பலங்கள்

சிரத்தை, வீரியம், ஸதி, சமாதி, பிரஞ்ஞை என்று பலங்கள்-ஆற்றல்கள்-ஐந்து.

சிரத்தை அறிவை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை, வீரியம் (சாமர்த்தியம்) செய்கைமை அடிப்படையாகக் கொண்ட விடாமுயற்சி. ஸதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/84&oldid=1386975" இலிருந்து மீள்விக்கப்பட்டது