பக்கம்:பௌத்த தருமம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

85


மக்கள் என்றும் நிலைத்திருக்கக்கூடிய துக்கமற்ற இன்ப நிலை இருக்கின்றதா?

என்றும் நிலைத்திருக்கும் இன்பநிலை தான் புத்தர் பெருமான் கூறியுள்ள நிருவாணம்.

அதை இந்தப் பிறவியிலேயே அடைய முடியுமா?

முடியும்; இந்த உலகிலேயே, இந்தப் பிறவியிலேயே, இந்த உடலோடு இருக்கும் போதே அடைய முடியும்.

மக்கள் மேற்கொண்டு பிறவி யில்லாமல் நிருவாணப் பேற்றை அடைவதற்கு வழி என்ன?

ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தைப் பற்றியும் , வாழ்க்கையைப் பற்றியும் உண்மையை உய்த்துணர வேண்டும். வாழ்க்கையைச் செம்மையான முறையில் அமைத்துக் கொண்டு, முறை பிறழாமல் மிகுந்த கவனத்துடன் நடந்துவர வேண்டும். அம்முறையைப் பற்றிப் புத்தர் விவரமாக அறிவித்து, அதன்படி, தாமும் வாழ்ந்து காட்டியுள்ளார்.

புத்தர் அருளிய நெறி செயலில் கடைப்பிடிப்பதற்கே யன்றிப் படித்து விவாதம் செய்வதற்கு அன்று. அந்நெறியிலே சிறிதளவு பயிற்சி பெற்றாலும் பெரும் பயன் விளையும். அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலியவை எவ்வளவு அற்பமா யிருந்தாலும், அவை ஒவ்வொன்றும் வாழ்க்கைப் பள்ளத்தைத் தாண்டிச் செல்வதற்கேற்ற ஒரு படிக்கட்டாகும். ‘நான்’ என்பது கானல் நீர்; அதற்காக வாழ்தல் யானை சேற்றில் ஆழ்தலைப் போன்றது. உயிர் அகண்டமானது; அதிலே நாம் ஒவ்வொருவரும் ஒரு துளியே. ‘மனப் பண்பாட்டிற்காகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/90&oldid=1387044" இலிருந்து மீள்விக்கப்பட்டது