பக்கம்:பௌத்த தருமம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பௌத்த தருமம்


குணங்களையும் செயல்களையும் குறிக்கலாம். எந்த முறையில் பார்த்தாலும், எந்த ஜந்துவுக்கும் ஆன்மா இல்லை என்றே பொருள்படும்; 'அ ந த் தா - அநான்மம்' என்பதே புத்தர் போதித்த கொள்கை.

ஆன்மா என்பது எது? உலகிலே சில சமயத்தார்கள், பிராணிகளில் (மனிதருள்ளிட்ட சகல ஜந்துக்களிலும்) ஒவ்வொன்றின் உடலுக்குள்ளும் அழியாத தன்மையுள்ள ஆன்மா ஒன்று தங்கியிருக்கின்றது என்றும், உடல் நசித்துப் போகும்போது அவ்வான்மா, கூட்டிலிருந்து பறவை வெளியேறிப் பறந்து செல்வதுபோல், வெளியேறி விடுகின்றது என்றும் நம்புகிறார்கள். உடல் அழியினும் தான் அழிவுறாத அத்தகைய ஆன்மா ஒன்று உடலுள் இல்லை என்று புத்தர் உபதேசித்திருக்கிறார் என்பதே பெளத்தர்கள் முடிவு.

இக்கால இந்துக்கள், ஒவ்வோர் உடலிலும் தனி ஆன்மா ஒன்று உறைகின்றது என்றும், அது அழிவற்றது என்றும், உடல் அழியும்போது அதுவும் வெளியேறுகின்றது என்றும், அதன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி அது மறுபடி வேறு உடலுடன் உலகிலே தோன்றுகின்றது, அல்லது சுவர்க்கத்தை அடைகின்றது என்றும் நம்புகின்றனர். வேறு சில சமயத்தவர்களும் அழிவற்ற ஆன்மாவில் நம்பிக்கை கொண்டிருப்பதையும் காணலாம்.

ஆனால் புத்தர் அழிவற்ற ஆன்மா ஒன்று இருப்பதாக நம்பவில்லை கூடுவிட்டுக் கூடுபாய்வது போல. அது உலகிலே பல உடல்களில் மாறி மாறி வந்து அடைபட்டிருப்பதாகவும் நம்பவில்லை. அவர் இந்த அநான்மக் கொள்கையை மட்டும் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/95&oldid=1386910" இலிருந்து மீள்விக்கப்பட்டது