பக்கம்:பௌத்த தருமம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பெளத்த தருமம்


கூறியுள்ளது. இது: 'ஒரு கனி தானாக உண்டாவதில்லை, மற்றொருவரால் அது உண்டாக்கப்படுவதுமில்லை; ஒரு காரணத்தைக் கொண்டு அது உண்டாகின்றது; காரணம் தீர்ந்ததும் அதுவும் தீர்ந்து விடுகின்றது.'

வெளிப் பொருள்களுக்கு அமைந்துள்ள இதே விதியை உட்பொருள்களுக்கும் - அத்யான்மிக விஷயங்களுக்கும்-பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும். உடலும், மனமும் ஒன்றுசேர்ந்து மனிதன் என்று சொல்லப்படும் ஒருவன் தோன்றுவதற்கும் வித்திலிருந்து முளை வருதலையே உபமானமாகக் கொள்ளலாம். அழிவற்ற ஆன்மா ஒன்றை வருவித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மனிதன் நாமரூபங்கள் (அ ரு வு ம் - ரு வு ம்.) அல்லது மனமும் ஜடப் பொருளும், அல்லது உயிரும் ஜடப் பொருளும் சேர்ந்தவன் என்பதைத்தான் ஐந்து கந்தங்கள் சேர்ந்து உண்டானவன் என்று கூறப்படுகின்றது. கந்தங்கள் மனிதனாகப் பரிணமிப்பதற்கு ஏற்ற காரணமும், துணையான நிலைமைகளும் ஒத்திருக்கவேண்டும். காரணம் பேதைமை (அவித்தை) என்று கூறப்பட்டுள்ளது. பேதைமையிலிருந்து மன, மொழி, மெய்களால் நிகழும் நற்செயல்களும், தீச்செயல்களும் உண்டாகின்றன: அவா, துவேஷம், மயக்கம் முதலியவை தோன்றுகின்றன. பேதைமை என்ற வித்து முளை விடுவதற்குப் பஞ்ச பூதங்களோடு 'விஞ்ஞான ஸ்கந்தம்' எனப்படும் உணர்வும் சேர்ந்து பக்குவமான நிலைமைகளை அளிக்கின்றன.

எனவே மனிதன் உண்டாவதற்கு ஒரு கர்த்தா காரணமாக இல்லை; 'தரும சங்கேதம்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/99&oldid=1386926" இலிருந்து மீள்விக்கப்பட்டது