பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106) அழைக்கப்படுவோர்கள் நாளைக்கு நிதானஸ்தர்களாய் விடுவார்கள். எது போலவென்ருல் நேற்று வரை தீவிரக் கட்சியாரென்றழைக்கப்பட்டோர் இன்றைக்கு நிதானஸ் தர்கள் என்று சொல்லப்படுவது போல, காங்கிரஸ், ஆரம்பத்திலே ஏற்படுத்தப் பெற்று. இப்பொழுது மிகுந்த நிதானமுடையவை என்று கருதப் பெறும் பூரீ தாதாபாயின் கருத்துக்கள் வெளியிடப்பட்ட காலத்தில், அவரை ஜனங்கள் மிகுந்த அவசர புத்தியுடையவர் என்று கூறினர்கள். இதல்ை, தீவிர கட்சிக்காரன் அவசர சிந்தையுடையவன்' என்ற வார்த்தைகள் அபிவிருத்தி யைக் குறிக்கின்றன என்று உங்களுக்கு விளங்குகின்றது அல்லவா? எங்களை இப்பொழுது ஜனங்கள் தீவிரக் கட்சியாளர்கள் என்று சொல்லுகிரு.ர்கள். எங்களுடைய சந்ததியார் தாமே தீவிரஸ்தர்களென்றும் நாங்கள் நிதானஸ்தர்களென்றும் சொல்லத் தலைப்படுவார்கள். ஒவ்வொரு புதிய கட்சியும் ஆரம்பத்தில் அவசர சிந்தனை யுடையதென்று கூறப் பட்டபோதிலும் கடைசியில் மி கு ந் த நிதானமுடையதென்றே எண்ணப்பெற்று விடுகின்றது. ராஜாங்க விஷயங்களிலே இதுதான் சாத்தியம், இதுதான் சாத்தியமில்லையென்று வரை யறுத்துக் கூறமுடியாது. இன்னுமாயிர வருஷங்களில் என்ன நேரிடும், என்ன நேரிடாது, என்று நாம் சொல்ல முடியுமா? ஒருவேளை அந்த நீடித்த காலவரைக்குள்ளாக வெள்ளை நிறமுள்ள ஜாதியார்கள் எல்லாம் ஒரே பிரளயத்தில் நாசமடைந்து போகக்கூடும்.ஆதலால் நாம் தற்கால ஸ்திதிக்கு இசைவான ஒரு ஆலோசனை தயார் செய்து நடத்தவேண்டும். இப்பொழுது எனக்கிருக்கும் நேரத்திற்குள்ளாக இவ் விஷயத்தின் விவரங்களே எல்லாம் எடுத்து விளக்குதல் சாத்தியமில்லை. ஒன்று மட்டிலும் எல்லோராலும் ஒப்புக்