பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 கொள்ளப்படுகிறது; அதாவது, இந்த கவர்ன்மென்ட் நமக்கு சரிப்பட்டு வராது. ஒரு தேசத்தை மற்ருெரு தேசத்தார் ஒரு போதும் சீராக அரசாள முடியாதென்றும் ஆகையால் அவ்வித ஆட்சியானது நிலைப்பெற்றிருத்தல் அசாத்தியமென்றும் ஒரி புகழ் பெற்ற ராஜதந்திரி சொல்லி யிருக்கின்ருர். இந்த முக்கியமான கருத்தின் சம்பந்தமாக பழைய கட்சியாருக்கும் நமக்கும் இடையே எவ்விதமான அபிப்பிராய பேதமுங்கிடையாது. ஒரு விஷயம் உறுதி தான். அதாவது அன்னிய ராஜாங்கம் நமது நாட்டை சர்வ நாசம் செய்திருக்கின்றது. ஆரம்பத்தில் நாம் எல்லோரும் பிரமித்து நின்று விட்டோம், இந்த ராஜாங் கத்தார் நமக்கு செய்வதெல்லாம் நமது நன்மையின் பொருட்டாகவே யென்றும், தாமர்லென், செங்கிஸ்கான் முதலிய வெளிநாட்டுக் கொடியோர்கள் நம் மீது படை யெடுத்து நாசம் செய்யாமலிருக்கும் பொருட்டும், உள்நாட்டிலே பெருங்கேடு விளைவிக்கக் கூடிய கலகங்கள் ஏற்படாமலிருக்கும் பொருட்டும், இந்த இங்கிலீஷ் அரசாட்சி ஆகாயத்திலிருந்து இறங்கி வந்திருக்கிற தென்றும் நாம் எண்ணிளுேம். சிறிது காலம் சந்தோஷ மாகவே இருந்தோம், ஆனல் சீக்கிரத்தில் உண்மை வெளியாய் விட்டது. பூரீதாதாபாய் ஓரிடத்தில் சொல்லி யிருப்பதைப்போல இந்த நாட்டில் பிரிட்டிஷ் ஏற்படுத்தி யிருக்கும் அமைதி நிலையானது; நாம் ஒருவரை ஒருவரி கழுத்தை நெரிக்காமல் தடுத்துவிட்டு, அன்னியர்கள் நம் எல்லோரையும் கழுத்தை நெரிப்பதற்காகவேயென்று விளங்கிவிட்டது. பிரிட்டிஷ் அமைதி (Pax Britanicae) இந்நாட்டிலே ஏன் ஸ்தாபிக்கப்பட்டது? ஒர் அன்னிய ராஜாங்கம் தேசம் முழுமையும் கைப்பற்றி லாபம் தின்னு வதற்காக! பிரிட்டிஷ் அமைதியின் பலன் இதுவே என்பது இப்பொழுதுதான் ஜனங்களுக்கு சிறிது சிறிதாகப் பரவி